சனிக்கிழமை 21 செப்டம்பர் 2019

1984க்குப் பிறகு மக்களவைத் தேர்தல் சந்திக்கும் மாபெரும் வெற்றி! காட்சி ஒன்று, ஆனால் கட்சி வேறு!

DIN | Published: 23rd May 2019 06:36 PM


2019 மக்களவைத் தேர்தலில் பாஜக வரலாறு காணாத வெற்றியைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக பெரும்பான்மை பலத்தோடு ஆட்சியமைக்க உள்ளது.

மாலை 6 மணி நிலவரப்படி பாஜக 345 தொகுதிகளிலும், காங்கிரஸ் 92 தொகுதிகளிலும், இதர கட்சிகள் 105 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

ஆட்சியமைக்க 272 தொகுதிகளில் வெற்றிபெற்றிருந்தால் போதும் என்ற நிலையில் பாஜக கிட்டத்தட்ட 345 தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இது ஏறத்தாழ வெற்றிக்கான அறிகுறியாகவே இருக்கும்.

மோடி அலை காரணமாக கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில் பாஜக பெற்ற மாபெரும் வெற்றிச் சாதனையையே இது முறியடிக்கும் வகையில் அமைந்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி இந்த அளவுக்கு வெற்றி வாகைச் சூடுவார்கள் என்று தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளோ, பிந்தைய கருத்துக் கணிப்புகளோ கணிக்க இயலாத அளவுக்கு வெற்றி எண்ணிக்கை சிகரம் தொட்டுள்ளது.

இது 1984ம் ஆண்டுக்குப்பிறகு நடக்கும் சரித்திர வெற்றியாகும். இது பிரதமராக இருந்த இந்திரா காந்தி சுட்டுக் கொலை செய்யப்பட்ட பிறகு நடந்த பொதுத் தேர்தலாகும். 

1984ம் ஆண்டு மக்களவைக்கு நடைபெற்ற 8வது பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தான் போட்டியிட்ட 491 தொகுதிகளில் 404 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியைக் கைப்பற்றியது.

அப்போது 224 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜகவோ வெறும் 2 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று படுதோல்வியைத் தழுவியது.

வாக்கு வித்தியாசம் என்ற அளவில் பார்த்தால், அப்போது காங்கிரஸ் ஒட்டுமொத்தமாக பெற்ற வாக்குகள் 49.10% ஆகும். பாஜக பெற்ற வாக்குகள் 7.74% மட்டுமே. 

அப்போதைய இந்தியாவின் மக்களவைத் தொகுதி வெற்றி நிலவரம் குறித்த வரைபடமே அந்த வெற்றிச் சாதனையை நமக்கு உணர்த்துவதாக உள்ளது.

இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வரலாறு திரும்பியுள்ளது. காட்சி ஒன்றுதான். ஆனால் கட்சி தான் வேறு.

மோடி அலை காரணமாகவே 2014ம் ஆண்டு பாஜக வெற்றி பெற்றதாகக் கூறப்பட்ட நிலையில், 2019ம் ஆண்டு தேர்தலில் பாஜக 250 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுவிட்டது. இன்னும் 100 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை எட்ட உள்ளது.

இது பாஜகவின் மகத்தான வெற்றியாகவே கருதப்படும். இதற்கு இந்திய மக்களின் ஏகோபித்த ஆதரவும் ஒரு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

4 நாள் அரசுமுறை பயணமாக வங்கதேசம் சென்றாா் கடற்படை தளபதி கரம்வீா் சிங்
ஹரியாணா பேரவைத் தோ்தலில் 70-க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும்: முதல்வா் மனோகா் லால் கட்டா்
இடைத்தோ்தலில் போட்டியிடும் மஜத வேட்பாளா்கள் நாளை முடிவு: முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெகௌடா
இடைத்தோ்தல்: தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களுக்கு பெரும் பின்னடைவு
தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களின் 15 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல்: அக்.21-இல் வாக்குப்பதிவு?