செவ்வாய்க்கிழமை 25 ஜூன் 2019

ஆந்திர முதல்வராக 30-ஆம் தேதி பதவியேற்கிறார் ஜெகன்மோகன் ரெட்டி

DIN | Published: 23rd May 2019 01:24 PM

 

ஆந்திர மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சி சட்டப்பேரவைத் தேர்தலில் பின்னடைவைச் சந்தித்துள்ளது. 

மக்களவைத் தேர்தலுடன் ஆந்திர மாநிலத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற்றது. இதில் எதிர்கட்சியாக இருந்த ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தற்போது முன்னிலைப் பெற்றுள்ளது. 

சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலைச் சந்தித்தன.

இதில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 150 பேரவைத் தொகுதிகளில் முன்னிலைப் பெற்றுள்ளது. தெலுங்கு தேசம் 24 இடங்களிலும், ஜன சேனா 1 இடத்திலும் முன்னிலைப் பெற்றுள்ளன. 

இந்நிலையில், ஆந்திர முதல்வராக 30-ஆம் தேதி ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்கிறார் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் உம்மாரெட்டி வெங்கடேஸ்வரலு தெரிவித்துள்ளார். மேலும் இன்று மாலைக்குள்ளாக சந்திரபாபு நாயுடு, ஆந்திர முதல்வர் பதவியை ராஜிநாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

முலாயம்சிங் மருத்துவமனையில் அனுமதி
தில்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது
புதுப்பொலிவு பெறுகிறது "தில்லி செங்கோட்டை'
வெளிநாடுகளில் இந்தியர்களின் கருப்புப் பணம் ரூ.34 லட்சம் கோடி: நாடாளுமன்றத்தில் தகவல்
குழந்தைகள் உயிரிழப்பு விவகாரம்: மத்திய, பிகார் அரசுகள் பதிலளிக்க 7 நாள் கெடு