கிர்கிஸ்தான் வெளியுறவு அமைச்சருடன் சுஷ்மா சந்திப்பு

கிர்கிஸ்தான் சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் சின்கிஜ் அய்டார்பேகோவை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.


கிர்கிஸ்தான் சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் சின்கிஜ் அய்டார்பேகோவை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களின் மாநாடு, கிர்கிஸ்தானில் 2 நாள்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கிர்கிஸ்தானுக்கு சுஷ்மா ஸ்வராஜ் சென்றுள்ளார்.
பிசுகெக்கில் அவர், கிர்கிஸ்தான்  வெளியுறவுத் துறை அமைச்சரை சந்தித்துப் பேசினார். இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறுகையில், கிர்கிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சருடன் சுஷ்மா ஸ்வராஜ், அரசியல், பாதுகாப்பு, வணிகம், முதலீடு, சுகாதாரம் உள்ளிட்ட இருதரப்பு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமானதாக அமைந்தது என்றார்.
சீனா ஆதிக்கம் செலுத்தும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில், கடந்த 20005ஆம் ஆண்டு முதல் இந்தியா பார்வையாளராக இருந்தது. இந்நிலையில், அந்த அமைப்பில் இந்தியாவும், பாகிஸ்தானும் கடந்த 2017ஆம் ஆண்டு முழுநேர உறுப்பினர்களாக இணைந்தன. கடந்த மாதம் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்களின் மாநாட்டில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். இதையடுத்து, தற்போது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களின் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சர்வதேச மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்தும், ஜுன் மாதம் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் தலைவர்கள் மாநாட்டுக்கான ஏற்பாடுகளை செய்வது குறித்தும் ஆலோசனை நடத்தப்படவுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com