முதலில் வாக்கு ஒப்புகைச் சீட்டையே சரிபார்க்க வேண்டும்: தேர்தல் ஆணையத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கோரிக்கை

வாக்கு எண்ணிக்கையின் போது முதலில் வாக்கு ஒப்புகைச் சீட்டையே சரிபார்க்க வேண்டும் என்று 22 எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று (செவ்வாய்கிழமை) தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர்.
முதலில் வாக்கு ஒப்புகைச் சீட்டையே சரிபார்க்க வேண்டும்: தேர்தல் ஆணையத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கோரிக்கை


வாக்கு எண்ணிக்கையின் போது முதலில் வாக்கு ஒப்புகைச் சீட்டையே சரிபார்க்க வேண்டும் என்று 22 எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று (செவ்வாய்கிழமை) தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர்.

வாக்கு ஒப்புகைச் சீட்டு விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, திமுக எம்பி கனிமொழி,  ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால், பகுஜன் சமாஜ் தலைவர் சதீஷ் சந்திரா உள்ளிட்ட 22 எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்தனர். 

இந்த சந்திப்பின்போது, வாக்கு ஒப்புகைச் சீட்டை சரிபார்ப்பதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளில், தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு முன்பு முதலில் வாக்கு ஒப்புகைச் சீட்டை சரிபார்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மேலும், வாக்கு ஒப்புகைச் சீட்டை சரிபார்க்கும்போது ஏதேனும் வித்தியாசம் ஏற்பட்டால், குறிப்பிட்ட பேரவைத் தொகுதிக்குட்பட்ட வாக்குச் சாவடிகள் அனைத்திலும், மொத்த வாக்கு ஒப்புகைச் சீட்டையும் வாக்கு இயந்திரத்துடன் ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. 

இந்த சந்திப்புக்குப் பிறகு எதிர்க்கட்சித் தலைவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். 

அப்போது காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் பேசுகையில், 

"நாங்கள், முதலில் வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை எண்ண வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தோம். அதில் ஏதேனும் வித்தியாசம் ஏற்பட்டால், அந்த பேரவைத் தொகுதியில் உள்ள அனைத்து வாக்கு ஒப்புகைச் சீட்டையும் சரிபார்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளோம்" என்றார்.       

காங்கிரஸ் தலைவர் அபிஷேக் சிங்வி கூறுகையில், 

"வாக்கு ஒப்புகைச் சீட்டு விவகாரம் தொடர்பாக மாதக் கணக்கில் கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால், இதுதொடர்பாக புதன்கிழமை ஆலோசனை நடத்தலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது" என்றார். 

தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு கூறுகையில், 

"மக்களின் தீர்ப்பை மதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம். அதில் மோசடி நடைபெற்றுவிடக் கூடாது" என்றார். 

பகுஜன் சமாஜ் தலைவர் சதீஷ் சந்திரா தெரிவிக்கையில், 

"உத்தரப் பிரதேசத்தில் வாக்கு இயந்திரம் தொடர்பாக நிறைய குளறுபடிகள் நிகழ்ந்துள்ளது. மத்தியப் படைகளை குவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்" என்றார்.

தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி மே 23-ஆம் தேதி நடைபெறுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com