இந்தச் செய்தியைப் படிக்கிறீங்கன்னா நீங்க 1957ல் இருக்கீங்கன்னு அர்த்தம்!

என்னாது, 1957ம் ஆண்டா? ஆம், நாம் இன்னும் இரண்டு நாட்களில் மக்களவை மற்றும் தமிழக இடைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகளுக்காக காத்திருக்கிறோம்.
இந்தச் செய்தியைப் படிக்கிறீங்கன்னா நீங்க 1957ல் இருக்கீங்கன்னு அர்த்தம்!

என்னாது, 1957ம் ஆண்டா? ஆம், நாம் இன்னும் இரண்டு நாட்களில் மக்களவை மற்றும் தமிழக இடைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகளுக்காக காத்திருக்கிறோம்.

எந்தக் கட்சிக்கு ஆதரவோ, எதிர்ப்போ எதுவாக இருந்தாலும் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைவருக்குமே இருக்கிறது. வியாழக்கிழமை காலையில் முடிவுகள் தெரிந்து விடும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. 

இது போல இந்தியாவில் முதல் முறையாக மக்களவைக்குத் தேர்தல் நடந்த போது முடிவுகள் எப்படி வெளியாகின. அப்போது யார் போட்டியில் இருந்தது போன்ற விஷயங்கள் நம்மிடம் புள்ளி விவரத்தோடு இருக்கிறது.

அதை உங்களுக்கு சொல்லாமல் இருந்தால் சரியாக இருக்குமா? நிச்சயம் இருக்காது. வாருங்கள். 1957ம் ஆண்டு வெளியான மக்களவைத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக தினமணி நாளிதழில் வெளியான செய்தியை புகைப்படத்தோடு பார்க்க ஒரு அரிய வாய்ப்பு இதோ..

 

பிரதமர்  நேரு தேர்ந்தெடுக்கப்பட்டார் 
சுமார் 2 லட்சம் வோட்டுகள் வித்தியாசத்தில் ஜெயித்தார்

1957, மார்ச் 14, அலகா பாத்: அலகாபாத் ஜில்லா (உ.பி.) புல்பூர் இரட்டை மெம்பர் தொகுதியில் இருந்து பொது ஸ்தானத்திற்கு பிரதமர் ஸ்ரீ ஜவாஹர்லால் நேருவும், ரிசர்வ் ஸ்தானத்திற்கு ஸ்ரீ. மசூரியாவும் (கா) இன்று லோக சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சீதாராம் கெம்கா என்ற சுயேச்சையை விட நேரு 1,93,119 வாக்குகள் அதிகம் பெற்றார்.

இது  தவிர தேர்தல் தொடர்பாக அன்றைய தினம்  தினமணி நாளிதழில் வெளியான செய்திகளின் சுருக்கத்தை மேலும் பார்க்கலாம்..

திட்ட இலாகா மந்திரி நந்தா வெற்றி
இந்திய சர்க்காரின் திட்ட இலாகா மந்திரியான குல்ஜாரிலால் நந்தா ஹிமத்நகர் தொகுதியிலிருந்து லோக சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஒரு பீஹார் மந்திரி தோல்வி யடைந்தார்
பீஹார் மராமத்திலாகா மந்திரி அப்துல்கய்யூம் அன்ஸாரி இன்று அசெம்பிளி தேர்தலில் தோல்வியடைந்தார்.

மேலும் சில செய்திகளின் தலைப்புகள்..

  • ஸ்வாமி ராமானந்த் ஜெயித்தார்
  • பார்லிமெண்டரி காரியதரிசி வெற்றி
  • மதுரையில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வெற்றி


தொடர்ந்து கடந்த காலங்களில் வெளியான தேர்தல் முடிவுகளையும், தினமணியில் வெளியான செய்திகளையும் நீங்கள் அறியலாம். காத்திருங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com