17-வது மக்களவைத் தேர்தலின் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகிறது. இதுவரை டைம்ஸ் நௌ-விஎம்ஆர், ரிபப்ளிக் டிவி- சி வோட்டர், ரிபப்ளிக் டிவி-ஜான் கி பாத், நியூஷ் நேஷன் ஆகிய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளது.
இந்த 4 கருத்துக் கணிப்புகளில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆட்சி அமைப்பதற்குத் தேவையான 272 இடங்களுக்கும் மேலான இடங்களிலேயே வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
டைம்ஸ் நௌ - விஎம்ஆர் கருத்துக் கணிப்பு:
பாஜக+ | 306 இடங்கள் |
காங்கிரஸ்+ | 132 இடங்கள் |
மற்றவை | 104 இடங்கள் |
ரிபப்ளிக் டிவி - சி வோட்டர் கருத்துக் கணிப்பு:
பாஜக+ | 287 இடங்கள் |
காங்கிரஸ்+ | 128 இடங்கள் |
மற்றவை | 127 இடங்கள் |
ரிபப்ளிக் - ஜான் கி பாத் கருத்துக் கணிப்பு:
பாஜக+ | 305 இடங்கள் |
காங்கிரஸ்+ | 124 இடங்கள் |
மற்றவை | 113 இடங்கள் |
நியூஷ் நேஷன் கருத்துக் கணிப்பு:
பாஜக+ | 282-290 இடங்கள் |
காங்கிரஸ்+ | 118-126 இடங்கள் |
மற்றவை | 130-138 இடங்கள் |