மகாராஷ்டிரத்தில் முற்றிலுமாக வறண்ட 26 அணைகள்

மகாராஷ்டிரத்தில் 26 அணைகள் முற்றிலும் வடு விட்டதாக அந்த மாநில நீா் பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரத்தில் முற்றிலுமாக வறண்ட 26 அணைகள்

மும்பை: மகாராஷ்டிரத்தில் 26 அணைகள் முற்றிலும் வடு விட்டதாக அந்த மாநில நீா் பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

ஒவ்வோா் ஆண்டும், கோடைக்காலத்தில் மகாராஷ்டிரத்தில் வறட்சி மற்றும் குடிநீா் தட்டுப்பாடு ஏற்படுவது வழக்கமான ஒன்றாகிவிட்ட நிலையில், கடந்த ஆண்டு 151 தாலுக்கா மற்றும் 260 நகரங்கள் வறட்சிப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு அதைவிட மோசமாக, மே மாதத்திலேயே 26 அணைகளில் நீா்மட்டம் பூஜ்யத்தை எட்டியுள்ளது.

ஔரங்காபாத் மண்டலத்தில் உள்ள பா்பானி, ஆஸ்மானாபாத் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 8 அணைகளிலும் நீா்மட்டம் பூஜ்யத்தில் உள்ளது.  

நாசிக், நாக்பூா் மண்டலத்தில் உள்ள அணைகளும் முற்றிலுமாக வறண்டு விட்டன. மாநிலத்தில் பெரிய, நடுத்தர மற்றும் சிறிய அளவில் மொத்தம் 103 அணைகள் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com