திருச்சூரில் நிறைவு பெற்றது பூரம் திருவிழா

திருச்சூரில் நடைபெற்று வந்த பூரம் திருவிழா, பாறமேக்காவு மற்றும் திருவம்பாடி கோயில் அணிகள் மீண்டும் அடுத்த ஆண்டில் சந்திப்பதாக கூறி பாரம்பரிய முறைப்படி விழாவை நிறைவு செய்தன. 
திருச்சூர் பூரம் விழாவில் கலந்துகொண்ட தெச்சிக்கோட்டுகாவு யானை (கோப்புப் படம்).
திருச்சூர் பூரம் விழாவில் கலந்துகொண்ட தெச்சிக்கோட்டுகாவு யானை (கோப்புப் படம்).


திருச்சூரில் நடைபெற்று வந்த பூரம் திருவிழா, பாறமேக்காவு மற்றும் திருவம்பாடி கோயில் அணிகள் மீண்டும் அடுத்த ஆண்டில் சந்திப்பதாக கூறி பாரம்பரிய முறைப்படி விழாவை நிறைவு செய்தன. 
கேரள கோயில் திருவிழாக்களில் மிகப் பிரபலமானது திருச்சூர் பூரம் திருவிழா. பழைமை வாய்ந்த திருச்சூர் வடக்குந்நாதன் கோயில் வளாகம் மற்றும் கோயில் மைதானத்தில் இவ்வாண்டின் பூரம் திருவிழா பாரம்பரிய சடங்குகளுடன் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது. 
 கோயில் மைதானத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களின் ஆரவாரத்துடன், கோயிலின் தெற்கு நுழைவு வாயிலை மாநிலத்திலேயே உயரமான யானையான தெச்சிக்கோட்டுக்காவு ராமசந்திரன் யானை திறந்து வைத்தது. இந்த நிகழ்ச்சி பூரம் விளம்பரம் எனப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, சிறிய பூரங்கள் என்று அறியப்படும் 9 கோயில்களின் யானைகள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றன. வைகாசி பூரம் தினமான திங்கள்கிழமை முக்கிய நிகழ்ச்சிகளின் நிறைவாக, மாலை குடைமாற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைக் காண பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.
பாறமேக்காவு, திருவம்பாடி கோயில்கள் சார்பில் தலா 15 யானைகள் இந்தக் குடைமாற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டன. இதையடுத்து, வடக்குந்நாதன் கோயில் தெற்கு கோபுரத்தையொட்டிய தேக்கின்காடு மைதானத்தில் அதிகாலை 3.45 மணிக்குத் தொடங்கிய பூரம் வெடிக்கட்டு என்னும் பிரசித்தி பெற்ற அதிர்வேட்டு நிகழ்ச்சி விடியும் வரை நடைபெற்றது. அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் இவற்றை கண்டு ரசித்தனர். 
தொடர்ந்து 36 மணி நேரம் நடைபெற்ற இவ்விழா, பாறமேக்காவு- திருவம்பாடி கோயில் உற்சவர்களை ஏற்றிய யானைகள் கலந்து கொண்ட பிரிவுபசார நிகழ்ச்சியுடன் நிறைவு பெற்றது. 
முன்னதாக, 10.5 அடி உயர தெச்சிக்கோட்டுகாவு ராமச்சந்திரன் யானை, பூரம் திருவிழாவில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது. 54 வயதான அந்த யானை, கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து பூரம் திருவிழாவில் முதன்மையாகப் பங்கேற்று வருகிறது.
இந்த யானை உரிய உடல் தகுதியுடன் இல்லை எனக்கூறி, அரசு தடை விதித்திருந்தது. எனவே, அந்த யானை திருவிழாவில் பங்கேற்பதில்  இழுபறி நீடித்தது. இதனிடையே, அந்த யானையை மருத்துவக் குழு பரிசோதித்து, யானை முழு உடல் தகுதியுடன் இருப்பதாகச் சான்றிதழ் அளித்ததையடுத்து, சில நிபந்தனைகளுடன் அந்த யானை பங்கேற்க மாவட்ட நிர்வாகம் சனிக்கிழமை அனுமதி அளித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com