திங்கள்கிழமை 20 மே 2019

பொருளாதாரத்தை மந்த நிலையில் விட்டுச் சென்றவர் மன்மோகன்

DIN | Published: 06th May 2019 02:52 AM

நாட்டின் பொருளாதார நிலை குறித்து விமர்சித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பதிலடி கொடுத்துள்ளார்.
 "நாட்டின் பொருளாதாரத்தை மந்த நிலையில் விட்டுச் சென்றவர் மன்மோகன் சிங்' என்று அவர் கூறியுள்ளார்.
 முன்னதாக, மன்மோகன் சிங் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில், "நாட்டின் பொருளாதாரத்தை மோசமான சூழலுக்கு இட்டுச் சென்றிருக்கிறது மோடி அரசு; பொருளாதார மந்த நிலையை நோக்கி நாடு நகர்வதை உணர்கிறேன்' என்று கூறியிருந்தார்.
 அவரது விமர்சனத்துக்குப் பதிலடி கொடுத்து, ஜேட்லி தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது: கடந்த 2014-இல் நாட்டின் பொருளாதாரத்தை மந்த நிலையில் விட்டுச் சென்றவர் மன்மோகன் சிங். கொள்கை முடக்கமும், ஊழல்களும்தான், தனக்கடுத்து ஆட்சிக்கு வந்த மோடி அரசுக்கு மன்மோகன் சிங் விட்டுச் சென்ற பரிசாக இருந்தன. அதுமட்டுமன்றி, கடந்த மக்களவைத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, நாடாளுமன்றத்தில் காங்கிரûஸ சிறிய கட்சியாக சுருங்க வைத்த பெருமையும் மன்மோகன் சிங்கையே சாரும்.
 அவரது ஆட்சிக் காலத்தில் வெளிநாட்டு முதலீடுகளுக்கு உகந்த சூழல் இல்லாத முதல் 5 நாடுகளின் பட்டியலில் இந்தியா இருந்தது. பொருளாதார நிபுணரான மன்மோகன் சிங், அரசியல்வாதியாக மாறிய பிறகு, பொருளாதார அறிவையும், அரசியல் அறிவையும் இழந்து விட்டார் என்று ஜேட்லி அந்தப் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளார்.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

மகாராஷ்டிராவில் லாரியின் டயர் வெடித்து விபத்து: 13 பேர் பரிதாப பலி 
கோவிலில் கோட்ஸே பிறந்தநாள் கொண்டாட்டம்: குஜரத்தில் ஹிந்து மஹா சபா தொண்டர்கள் ஆறு பேர் கைது 
நம்பிக்கை வாக்கெடுப்புக்குத் தயார்: மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத்
இந்தியா முதல்முறையாக துல்லியத் தாக்குதல் நடத்தியது 2016-இல் தான்: ராணுவம்
கருத்துக் கணிப்பு முடிவுகள் எதிரொலி: 1422 புள்ளிகள் உயர்வுடன் முடிந்த பங்குச்சந்தை