திங்கள்கிழமை 20 மே 2019

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் ஆற்றில் மூழ்கி இறந்த பரிதாபம்: உடல்களை மீட்ட இந்திய கப்பற்படை

ANI | Published: 04th May 2019 08:45 AM

 

இம்பால் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் ஆற்றில் மூழ்கி இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மணிப்பூரில் அமைந்துள்ள மபிதேல் தடுப்பணையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மாயமானதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்திய கப்பற்படையை சேர்ந்தவர்கள் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அப்போது ராஜீவ் (35) என்பவரது உடல் புதன்கிழமை மீட்கப்பட்டது.

இதையடுத்து கடந்த 2 நாட்களாக தொடர்ந்த தேடிய நிலையில், எஸ்.ரோமன் (21) மற்றும் என்.ராணி (19) ஆகியோரது உடல்கள் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

மகாராஷ்டிராவில் லாரியின் டயர் வெடித்து விபத்து: 13 பேர் பரிதாப பலி 
கோவிலில் கோட்ஸே பிறந்தநாள் கொண்டாட்டம்: குஜரத்தில் ஹிந்து மஹா சபா தொண்டர்கள் ஆறு பேர் கைது 
நம்பிக்கை வாக்கெடுப்புக்குத் தயார்: மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத்
இந்தியா முதல்முறையாக துல்லியத் தாக்குதல் நடத்தியது 2016-இல் தான்: ராணுவம்
கருத்துக் கணிப்பு முடிவுகள் எதிரொலி: 1422 புள்ளிகள் உயர்வுடன் முடிந்த பங்குச்சந்தை