புதன்கிழமை 22 மே 2019

பி.எம். நரேந்திர மோடி திரைப்படம் மே 24-இல் வெளியீடு

DIN | Published: 04th May 2019 12:47 AM


பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள பி.எம். நரேந்திர மோடி திரைப்படம் மே 24-ஆம் தேதி வெளியாகும் என வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
பி.எம். நரேந்திர மோடி திரைப்படம் ஏப்ரல் 11-ஆம் தேதி வெளியாகும் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நாடு முழுவதும் தேர்தல் நடைபெற்று வருவதால் இத்திரைப்படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்தது. 
மின்னணு ஊடகங்களில் எந்த கட்சி அல்லது தனிநபருக்கோ ஆதாயம் அளிக்கும் வகையிலான எந்தவித ஒலிபரப்புகளையும் மேற்கொள்ளக்கூடாது என்ற நெறிமுறையின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் இந்த தடையை விதித்தது.
பட வெளியீட்டுக்கு ஒரு நாள் முன்னதாக விதிக்கப்பட்ட இந்த தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது என தெரிவித்துவிட்டது.
மக்களவை தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி வெளியாக உள்ளன. இந்த நிலையில், பி.எம். நரேந்திர மோடி திரைப்படம் மே 24-ஆம் தேதி வெளியாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் சந்தீப் சிங் கூறியுள்ளதாவது:
பொறுப்பு மிகுந்த குடிமகனாக நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டியது நமது கடமை. பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, பி.எம். நரேந்திர மோடி திரைப்படத்தை மக்களவை தேர்தல் முடிவுகளுக்கு பின் உடனடியாக வெளியிடுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. 
இந்த முறை எந்த எதிர்ப்பும் இல்லாமல் சுமுகமான முறையில் படம் திரைக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் அவர்.
பிரதமர் மோடி கதாபாத்திரத்தில் விவேக் ஓபராய் நடித்துள்ள இந்த திரைப்படத்தை இயக்குநர் ஓமுங்க் குமார் இயக்கியுள்ளார்.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

அரியணையில் அமரப்போவது யார்? இது தினமணி வாசகர்களின் கணிப்பு
'வன்முறை ஏற்படலாம்': மாநிலங்களுக்கு உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
போர் விமானத்தில் இருந்து பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை 
உச்சநீதிமன்றத்துக்கு 4 புதிய நீதிபதிகள்: மத்திய அரசு ஒப்புதல் என தகவல்
பாரீஸில் இந்திய விமானப்படை அலுவலகத்தில் திருட்டு முயற்சி: ரஃபேல் ஆவணங்களுக்கு ஆபத்து?