மஹாபாரதம், ராமாயணம் மீது பிரச்னை இருந்தால் முதலில் சீதாராம் என்ற பெயரை நீக்கட்டும்: சிவ சேனை

மஹாபாரதமும், ராமாயணமும் ஹிந்து பயங்கரவாதம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி குற்றம்சாட்டினார். 
மஹாபாரதம், ராமாயணம் மீது பிரச்னை இருந்தால் முதலில் சீதாராம் என்ற பெயரை நீக்கட்டும்: சிவ சேனை

மஹாபாரதமும், ராமாயணமும் ஹிந்து பயங்கரவாதம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி குற்றம்சாட்டினார். இதற்கு சிவ சேனை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரௌத் கூறுகையில்,

ஹிந்துக்கள் பயங்கரவாதிகள் என்பதற்கு என்ன அர்த்தம்? மஹாபாரதமும், ராமாயணமும் ஒரு மையக் கருத்தை தான் முன்வைத்தன. அவை பொய்க்கு எதிராக உண்மையும், தீமைக்கு எதிராக நன்மையும் நிச்சயம் ஒருநாள் வெல்லும் என்பது மட்டும் தான். ராமரும், கிருஷ்ணரும் உண்மையின் முகங்கள். 

இதே கருத்தை இனியும் அவர் பிரதிபலித்தால், பாகிஸ்தானுக்கு எதிராக போராடும் நமது ராணுவ வீரர்களின் செயல் கூட வன்முறை என்று தான் கூறுவார். ஏனென்றால் பாகிஸ்தான் பயங்கரவாத செயலுக்கு எதிராக நாம் செயல்பட்டு நம்மை தர்காத்துக்கொண்டால் அது வன்முறை ஆகுமா?

சீதாரம் யெச்சூரியின் சித்தாந்தம், அவருடைய சொந்த சித்தாந்தம். அது, ஹிந்துக்களை எதிர்ப்பதன் மூலம் தன்னை மதசார்ப்பற்றவராக வெளிப்படுத்திக்கொள்வது மட்டும்தான்.

மஹாபாரதமும், ராமாயணமும் ஹிந்து பயங்கரவாதம் என்றால், முதலில் அவர் தனது பெயரில் உள்ள சீதாராம் என்பதை நீக்கட்டும். அதோபன்று அவரது கட்சி வேட்பாளர் கண்ணையா குமார் பெயரையும் மாற்றிக்கொள்ளட்டும். ஏனென்றால் அது கிருஷ்ணரின் பெயராகும் என்று பதிலடி அளித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com