இதை நான் புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு கூறவில்லை: எதைக் குறிப்பிடுகிறார் இன்ஃபோஸிஸ் நாராயணமூர்த்தி?

இதை நான் புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு கூறவில்லை. ஏற்கனவே 2014-ஆம் ஆண்டே இதை தான் வலியுறுத்தினேன் என்று இன்ஃபோஸிஸ் நாராயணமூர்த்தி கூறினார்.
இதை நான் புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு கூறவில்லை: எதைக் குறிப்பிடுகிறார் இன்ஃபோஸிஸ் நாராயணமூர்த்தி?

இந்தியாவுக்கு அளிக்கப்பட்டு வந்த "வர்த்தக முன்னுரிமை' அந்தஸ்தை ரத்து செய்ய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தியாவுடனான அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கு டிரம்ப் இவ்வாறு திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து இன்ஃபோஸிஸ் நிறுவனர் என்.ஆர்.நாராயணமூர்த்தி கூறியதாவது:

இதை திறம்பட எதிர்கொள்வதற்கு நாம் கடினமாகவும், புத்திசாலித்தனத்துடனும் உழைக்க வேண்டிய நேரமிது. இன்னும் கூடுதல் ஒழுக்கத்துடனும், சிறந்த போட்டியாளராகவும் செயல்பட வேண்டியது அவசியம். எந்த சிக்கலுக்கு எதிராகவும் அடுத்தவரை குற்றம்சாட்டுவது மிக எளிது. ஆனால், அதனை திறம்பட எதிர்கொண்டு வெற்றிபெறுவது தான் சிறந்த வழியாகும்.

நமது நாட்டிலுள்ள அனைத்து தொழிற்சாலைகளும் கடினமாக உழைத்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கச் செய்ய வேண்டும். வரிகளை சரியாக செலுத்த வேண்டும். அப்போதுதான் நமது நாட்டின் பாதுகாப்புத்துறைக்கு மேலும் தரமான ஆயுதங்கள், ஊதியம் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு தேவையான சிறந்த சலுகைகளை ஏற்படுத்த முடியும். இதை நான் புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு கூறவில்லை. ஏற்கனவே 2014-ஆம் ஆண்டே இதை தான் வலியுறுத்தினேன் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com