அதிக வயதில் (118) வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து கொண்ட மூதாட்டி!

அதிக வயதில் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர் என்ற சாதனையை பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 118 வயது மூதாட்டி பெற்றார். 
அதிக வயதில் (118) வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து கொண்ட மூதாட்டி!

அதிக வயதில் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர் என்ற சாதனையை பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 118 வயது மூதாட்டி பெற்றார். 

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த கர்தார் கௌர் சங்கா (118) மூதாட்டிக்கு லூதியானாவில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அதிக வயதில் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர் என்ற சாதனையை அந்த மூதாட்டி படைத்துள்ளார்.

இதுகுறித்து மருத்துவர் ரவ்நிந்தர் சிங் கூறுகையில், 

அந்த மூதாட்டியின் சகோதரர் 1903-ஆம் ஆண்டு பிறந்தவர் எனும் சான்று உள்ளது. அதேபோன்று அந்த மூதாட்டியின் மகளுக்கு தற்போது 90 வயதாகிறது. மேலும் 2 முதல் 3 ஆவணங்கள் மூலம் அந்த மூதாட்டிக்கு 118 வயதிருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த வயதில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்வது மிகவும் கடினமானது. அந்த மூதாட்டி தற்போது நலமுடன் உள்ளார். இதுகுறித்து கின்னஸ் மற்றும் லிம்கா சாதனைகளுக்காக பரிந்துரை செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com