இந்தியா

மும்பையில் மேலும் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

29th Jun 2019 11:41 AM

ADVERTISEMENT

 

மும்பையில் மேலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை மற்றும் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தொடர்ந்து நான்காவது நாளாக நீடிக்கும் கனமழையின் காரணமாக அங்கு இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. புணே கோந்தாவா பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 60 அடி சுற்றுச் சுவர் வெள்ளிக்கிழமை இடிந்து தரைமட்டமானது. 

இந்த விபத்தில் அருகில் இருந்த குடிசைப் பகுதியில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு இடங்களில் கட்டட இடிபாடுகள் ஏற்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இதனிடையே மும்பையில் நேற்று ஒரே நாளில் மழை பாதிப்பு காரணமாகவும், மின்னல் தாக்கியம், மின்சார விபத்து காரணமாகவும் 8 பேர் உயிரிழந்தனர். இதனால் ஆறு போல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழை வெள்ளம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாநிலம் முழுவதும் குறிப்பாக மேற்கு கடற்கரைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் நீடிப்பதால் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT