ரூ.76 கோடி நிலுவைத் தொகையை விரைந்து வழங்க வேண்டும்: அமைச்சர் ஓ.எஸ். மணியன்

தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டியுள்ள சந்தைப்படுத்துதல் ஊக்கத்தொகை ரூ. 76 கோடி நிலுவையை விரைந்து வழங்க வேண்டும் என மத்திய ஜவுளித் துறை
ரூ.76 கோடி நிலுவைத் தொகையை விரைந்து வழங்க வேண்டும்: அமைச்சர் ஓ.எஸ். மணியன்


தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டியுள்ள சந்தைப்படுத்துதல் ஊக்கத்தொகை ரூ. 76 கோடி நிலுவையை விரைந்து வழங்க வேண்டும் என மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் வலியுறுத்தினார்.
தில்லியில் இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியை அவரது அமைச்சகத்தில் புதன்கிழமை அமைச்சர் ஓ.எஸ். மணியன் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் ஓ.எஸ். மணியன் கூறியதாவது: 
ஜவுளித் துறையில் தமிழகத்திற்கான அனைத்துத் திட்டங்களையும் விரைந்து நிறைவேற்றித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி கூறியுள்ளார். 
குறிப்பாக, சந்தைப்படுத்துதல் ஊக்கத்தொகை ரூ. 76 கோடி, மத்திய அரசிடமிருந்து தமிழகத்துக்கு வர வேண்டியுள்ளது. இந்தத் தொகையை மத்திய பட்ஜெட்டிற்கு பிறகு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார்.
அதேபோல, ஜவுளித் துறையில் நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த காப்பீட்டுத் திட்டம், மாற்றம் செய்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததாலும், விரைவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளதாலும் அந்தத் திட்டம் தள்ளிவைக்கப்பட்டிருந்தது. 
இது தொடர்பாக இந்த பட்ஜெட்டில் அறிவிக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கூறியிருக்கிறார். அனைத்துத் திட்டங்களும் பட்ஜெட்டுக்கு பிறகு கனிவுடன் பரிசீலிக்கப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
தமிழகத்தில் குடிநீர்ப் பிரச்னை இருப்பதாக திமுகவினர் அரசியலுக்காக பேசி வருகின்றனர். அரசியல் விமர்சனத்திற்காக மட்டும்தான் அவர்கள் அவ்வாறு பேசுகின்றனர். தண்ணீர் பற்றாக்குறை என்பது வேறு. 
குடிநீர் பற்றாக்குறை என்பது வேறு. மக்களுக்கு எந்தவித இடர்பாடும் இன்றி குடிநீர் வழங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்துள்ளது என்றார் ஓ.எஸ். மணியன். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com