இந்தியா

ஆதார் அட்டையில் ஜாதி பெயர் இல்லாததால் திருமணத்தை நிறுத்திய மணமகன் வீட்டார்

25th Jun 2019 01:26 PM

ADVERTISEMENT


குண்டூர்: சீப்பை ஒளித்து வைத்து விட்டால் திருமணம் நின்று விடும் என்று ஒரு நகைச்சுவை காட்சி சினிமாவில் இடம்பெற்றிருக்கும்.

அதுபோல, மணப்பெண்ணின் ஆதார் அட்டையில் ஜாதி பெயர் இல்லாததால், திருமணத்தையே நிறுத்தியுள்ளார் ஒரு மணமகன்.

இது குறித்து மணமகள் வீட்டார் க்ரோசுரு காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். எந்த அடிப்படைக் காரணமும் இல்லாமல் திருமணத்தை நிறுத்தியதாக அதில் கூறப்பட்டுள்ளது.

ஸ்ரீ பிரமரம்பா மல்லேஸ்வரா சுவாமி கோயிலில் இந்த திருமணம் நடக்கவிருந்தது. மணமக்களின் ஆதார் அட்டைகளை கோயில் பூசாரி கேட்டிருந்தார். கோயிலில் பதிவு செய்ய ஆதார் அட்டைக் கொடுத்த போது, மணமகளின் ஆதார் அட்டையில் ஜாதி பெயர் இல்லாதது குறித்து பூசாரி கேள்வி எழுப்ப, அதையே மணமகன் வீட்டார் பெரிதுபடுத்திவிட்டனர்.

ADVERTISEMENT

இது குறித்து மணமகள் வீட்டார் உரிய விளக்கம் அளித்தும் அதனை ஏற்க மறுத்த மணமகன் வீட்டார், திருமணத்தை ரத்து செய்துவிட்டு சென்றுவிட்டனர்.

மணமகள் வீட்டார் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT