மாநிலங்களவை தேர்தலில் குஜராத்தில் இருந்து பாஜக சார்பில் போட்டியிடும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இந்தியத் தூதராகவும், வெளியுறவுத் துறை செயலராகவும் முன்பு பணியாற்றியுள்ள எஸ்.ஜெய்சங்கர், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் திடீரென சேர்த்துக் கொள்ளப்பட்டார். அமைச்சரவையில் அவருக்கு வெளியுறவு அமைச்சக இலாகா ஒதுக்கப்பட்டது. எனினும் நாடாளுமன்ற இருஅவைகளிலும் அவர் தற்போது உறுப்பினராக இல்லை.
மத்திய அமைச்சராக உள்ளதால், ஏதேனும் ஓர் அவையில் 6 மாதங்களுக்குள் அவர் உறுப்பினராக வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்நிலையில் மாநிலங்களவை தேர்தலில் குஜராத்தில் இருந்து பாஜக சார்பில் போட்டியிடும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார். முன்னதாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், பாஜகவில் முறைப்படி திங்கள்கிழமை இணைந்தார்.
தில்லியில் பாஜக செயல் தலைவர் ஜெ.பி. நட்டா முன்னிலையில் பாஜகவில் அவர் தன்னை இணைத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.