ஒவ்வொரு நாளும் நான் எதிர்கொள்ளும் வேதனையை உங்களிடம் பகிர முடியாது: குமாரசாமி

அரசை சுமூகமாக நடத்த வேண்டும் என்பதால், ஒவ்வொரு நாளும் நான் எதிர்கொள்ளும் வேதனையை உங்களிடம் பகிர முடியாது என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்தார். 
ஒவ்வொரு நாளும் நான் எதிர்கொள்ளும் வேதனையை உங்களிடம் பகிர முடியாது: குமாரசாமி


அரசை சுமூகமாக நடத்த வேண்டும் என்பதால், ஒவ்வொரு நாளும் நான் எதிர்கொள்ளும் வேதனையை உங்களிடம் பகிர முடியாது என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்தார். 

கர்நாடக மாநிலம் சன்னபட்டனாவில் செவ்வாய்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கர்நாடக முதல்வர் ஹெச்.டி. குமாரசாமி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், 

"உங்களுடைய எதிர்பார்ப்புகளை நான் பூர்த்தி செய்வேன். ஒவ்வொரு நாளும் நான் எதிர்கொள்ளும் வேதனையை வெளிப்படுத்த முடியாது. அதை உங்களிடம் பகிர வேண்டும் என்று தோன்றும். ஆனால், என்னால் முடியாது. காரணம், மக்களின் துயரத்தை போக்க வேண்டும். அரசை சுமூகமாக நடத்த வேண்டும் என்கிற பொறுப்பு எனக்கு உள்ளது.

பாஜக தலைவர் ஒருவரிடம் இருந்து அழைப்பு வந்த பிறகு, கட்சி எம்எல்ஏ ஒருவர் என்னை தொடர்பு கொண்டார். ஜேடிஎஸ் கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் இணைய பாஜக அவருக்கு ரூ.10 கோடி வழங்குவதாக பேரம் பேசினர். பாஜக தலைவர்கள் தொடர்ந்து இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் கடவுள் அருளாலும், உங்களது ஆசிர்வாதத்திலும், இந்த அரசு அடுத்த 4 ஆண்டுகளுக்கு பாதுகாப்பாக உள்ளது" என்றார். 

இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், கர்நாடகா முன்னாள் முதல்வருமான சித்தராமையா தில்லியில் இன்று (புதன்கிழமை) பேசுகையில், 

"கர்நாடக அரசுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. பாஜக கடுமையான முயற்சித்து வருகிறது. ஆனால், அவர்களால் அதில் வெற்றி பெற முடியவில்லை" என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com