மம்தாவுக்கு இது கௌரவப் பிரச்னையாக இருக்காலம், ஆனால் எங்களுக்கு! பயிற்சி மருத்துவர்கள் வேதனை

போராட்டத்தைக் கைவிடுவது குறித்த பேச்சுவார்த்தைக்கு முதல்வர் மம்தா பானர்ஜி விடுத்திருந்த அழைப்பை நிராகரித்த மருத்துவர்கள்.
மம்தாவுக்கு இது கௌரவப் பிரச்னையாக இருக்காலம், ஆனால் எங்களுக்கு! பயிற்சி மருத்துவர்கள் வேதனை

மேற்கு வங்கத்தில் பயிற்சி மருத்துவர்கள் நோயாளியின் உறவினர்களால் தாக்கப்பட்டதைக் கண்டித்து தொடர்ந்து 6-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை இளநிலை மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

போராட்டத்தைக் கைவிடுவது குறித்த பேச்சுவார்த்தைக்கு முதல்வர் மம்தா பானர்ஜி விடுத்திருந்த அழைப்பை நிராகரித்த மருத்துவர்கள், "மம்தா பானர்ஜி முதலில் மன்னிப்பு கோர வேண்டும்; அதன் பிறகே போராட்டத்தை நிறுத்துவது குறித்து யோசிப்போம்' என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக என்ஆர்எஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பயிற்சி மருத்துவர்கள் கூறியதாவது:

எங்களிடம் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்துவதாக மம்தா அறிவித்துள்ளார். ஆனால், ஒட்டுமொத்த மருத்துவர்களும் எங்களுக்காக போராடும்போது நாங்கள் அதில் எப்படி பங்கேற்க முடியும்? இந்த போராட்டத்தை நிறுத்த நாங்களும் தயாராக உள்ளோம். ஆனால், அனைவரின் முன்னிலையிலும் இந்த பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும்.

மம்தா, போலீஸ் பணிக்கு நிகராக மருத்துவப் பணியை குறிப்பிடுகிறார். நாங்கள் போலீஸ் பணியை மதிக்கிறோம். அவர்கள் குற்றங்களைக் தடுக்க ஆயுதங்களுடன் போராடுபவர்கள். ஆனால் மருத்துவர்கள் அவ்வாறு கிடையாது. நோயளிகளை குணமாக்கும்போது எங்களுக்கும் நோய் தொற்று ஏற்படுகிறது. அதற்காக நாங்கள் எப்போதும் தர்ணா செய்தது கிடையாது.

எனவே மருத்துவர்கள் மீதான தாக்குதலை மம்தா நியாயப்படுத்த நினைக்க வேண்டாம். இப்பிரச்னை மம்தாவுக்கு இது கௌரவப் பிரச்னையாக இருக்கலாம். ஆனால், இது எங்களுக்கு வாழ்வாதாரப் போராட்டம். இது ஒன்றும் எதிர்பாராமல் நடந்த விபத்து அல்ல. திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல். இதில் படுகாயமடைந்த பயிற்சி மருத்துவர்களை மம்தா நிச்சயம் நேரில் சென்று பார்க்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com