புதன்கிழமை 19 ஜூன் 2019

ஹார்லி டேவிட்ஸன் பைக்குகளுக்கு இந்தியா 50% வரி விதிப்பதை ஏற்க முடியாது: டொனால்ட் டிரம்ப்

DIN | Published: 12th June 2019 01:31 AM


அமெரிக்காவின் ஹார்லி டேவிட்ஸன் மோட்டார் சைக்கிள்களுக்கு இந்தியா 50 சதவீதம் இறக்குமதி வரி விதிப்பதை ஏற்க முடியாது என்று அந்த நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சிபிஎஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு டிரம்ப் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது: வரி விதிப்பைப் பொருத்தவரை அமெரிக்காவின் செயல்பாடு இந்தியாவுக்கு மாறாக உள்ளது. நமது நட்பு நாடான இந்தியா செய்வதைப் பாருங்கள்; அந்த நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க மோட்டார் சைக்கிள்களுக்கு 100 சதவீதத்திலிருந்து 50 சதவீதம் வரை இறக்குமதி வரியாக வசூலிக்கிறார்.
ஆனால், பதிலுக்கு அவர்களிடமிருந்து நாம் எதுவுமே வசூலிப்பதில்லை.
ஹார்லி டேவிட்ஸன் மோட்டார் சைக்கிள்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டால், அங்கு அவற்றுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படுகிறது. ஆனால், அவர்கள் மிக அதிக எண்ணிக்கையில் மோட்டார் சைக்கிள்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். ஆனால், அவற்றுக்கு இங்கு வரி விதிக்கப்படுவதில்லை. பிரதமர் நரேந்திர மோடியிடம் நான் இதுகுறித்து தொலைபேசியில் பேசிய பிறகு, அவர் ஹார்லி டேவிட்ஸன் மோட்டார் சைக்கிள்களின் மீதான வரியை 50 சதவீதமாகக் குறைப்பதாக ஒப்புக் கொண்டார். 100 சதவீதத்திலிருந்து துளியும் குறையாமல் இருப்பதைவிட அது பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது என்பது மகிழ்ச்சி அளித்தாலும், அமெரிக்க மோட்டார் சைக்கிள்களுக்கு இன்னமும் 50 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது என்பது ஏற்க முடியாது என்றார் டிரம்ப்.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

கொளுத்தும் வெயிலில் ரயிலில் பயணிக்கவிருக்கும் யானைகள்! எதற்கு? எங்கே?
ஒவ்வொரு நாளும் நான் எதிர்கொள்ளும் வேதனையை உங்களிடம் பகிர முடியாது: குமாரசாமி
இந்த மாட்டுக்கு என்னவொரு வில்லத்தனம்? குஜராத்தில் இருவர் காயம்!வைரலாகும் விடியோ
சில வழித்தடங்களில் மட்டும் தனியார் இயக்கும் ரயில்கள்: ரயில்வே திட்டம்?
கிராம வங்கிகளில் வேலை வேண்டுமா? IBPS தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு!