வியாழக்கிழமை 22 ஆகஸ்ட் 2019

மேற்கு வங்கத்தில் வெடித்தது மருத்துவர்களின் போராட்டம்: புறநோயாளிகள் பிரிவு மூடப்பட்டது

DIN | Published: 12th June 2019 12:30 PM

கொல்கத்தா: இளநிலை மருத்துவர்களின் போராட்டத்தில் அரசு மூத்த மருத்துவர்களும் பங்கேற்றதால் மேற்கு வங்க மாநிலத்தில் இன்று அரசு மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன.

கொல்கத்தா மருத்துவமனையில் நோயாளி ஒருவர் இறந்துவிட்டதால், அவரது உறவினர், மருத்துவரைத் தாக்கியதைத் தொடர்ந்து இளநிலை மருத்துவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

இதனால் நேற்று மேற்கு வங்க மாநிலத்தில் மருத்துவமனைகளில் நோயாளிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

இந்த நிலையில், இளநிலை மருத்துவர்களுடன் மூத்த அரசு மருத்துவர்களும் போராட்டத்தில் குதித்ததால், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இன்று புறநோயாளிகள் பிரிவு மூடப்பட்டுள்ளது.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ப.சிதம்பரம் கைது: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ நடவடிக்கை
இந்தியா-ஜாம்பியா இடையே : 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து
ரயில் நிலையங்களில் நெகிழி பயன்பாட்டுக்கு தடை: அக்.2 -இல் அமலுக்கு வருகிறது
முதல் ரஃபேல் விமானம் செப். 20-இல் ஒப்படைப்பு
பாகிஸ்தானுக்கு செல்லும் நதி நீரை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை: மத்திய நீர்வளத் துறை அமைச்சர்