வியாழக்கிழமை 27 ஜூன் 2019

5 மாநில ஆளுநர்களுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்திப்பு

DIN | Published: 10th June 2019 08:15 PM


மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, தமிழகம் உள்ளிட்ட 5 மாநில ஆளுநர்கள் இன்று (திங்கள்கிழமை) நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். 

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா 10 நாட்களுக்கு முன் மத்திய உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த நிலையில் தமிழகம், தெலங்கானா உள்ளிட்ட 5 மாநில ஆளுநர்கள் இன்று அமித் ஷாவை தனித்தனியே சந்தித்தனர். 

இந்த சந்திப்பு குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், "ஆளுநர்கள், அந்தந்த மாநிலம் சார்ந்த பிரச்னைகள் குறித்து உள்துறை அமைச்சருடன் ஆலோசனை நடத்தினர். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு தான்" என்றனர். 

உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்த 5 மாநில ஆளுநர்கள்:

தமிழகம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் 

தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆளுநர் ஈஎஸ்எல் நரசிம்மன்

ஜார்கண்ட் ஆளுநர் திரௌபதி முர்மு

அருணாச்சலப் பிரதேசம் ஆளுநர் பிடி மிஸ்ரா

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

உளவு அமைப்புகளுக்கு புதிய தலைவர்கள்
வாக்காளர்களை அவமதித்துவிட்டது காங்கிரஸ்: பிரதமர் மோடி தாக்கு
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா உறுப்பினராக ஆசிய-பசிபிக் நாடுகள் ஒப்புதல்: பாகிஸ்தான் ஆதரவு
தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவில் உறுதி: கட்சி எம்.பி.க்களிடம் ராகுல் திட்டவட்டம்
ம.பி: அதிகாரிகளை தாக்கிய பாஜக எம்எல்ஏ கைது