வியாழக்கிழமை 27 ஜூன் 2019

8 ஆண்டுகளில் 8 தலைமை நீதிபதிகளை காண இருக்கும் உச்சநீதிமன்றம்  

DIN | Published: 10th June 2019 02:20 AM

உச்சநீதிமன்றத்தில் அடுத்த 8 ஆண்டுகளில் 8 தலைமை நீதிபதிகள் பொறுப்பேற்க இருக்கின்றனர். உச்சநீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையான 31 நீதிபதிகள் என்பது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட நியமனங்கள் மூலம்தான் எட்டப்பட்டது. இந்நிலையில், வரும் 2027-ஆம் ஆண்டு வரை, அதாவது அடுத்த 8 ஆண்டுகளில் 8 தலைமை நீதிபதிகள் பதவியேற்கவிருக்கும் விவரம் இப்போது தெரியவந்துள்ளது.
 உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது 65 ஆகும். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யார் என்பதில் நீதிபதிகளின் பணிமூப்பு முக்கியப் பங்கு வகிப்பதில்லை. அவர்கள் எந்த நாளில் உச்சநீதிமன்றத்தில் பொறுப்பேற்றார்கள் என்பதே முக்கியப் பங்கு வகிக்கிறது. முதலில் உச்சநீதிமன்ற நீதிபதியானவர்களுக்கு, முதலில் தலைமை நீதிபதி பதவி அளிக்கப்படுகிறது. ஒரே நாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட நீதிபதிகள் உச்சநீதிமன்றத்தில் பொறுப்பேற்றால், யார் முதலில் பதவியேற்றார் என்பதன் அடிப்படையில் தலைமை நீதிபதி தேர்வு செய்யப்படுவார்.
 உச்சநீதிமன்றத்தின் இப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வரும் நவம்பர் மாதம் ஓய்வு பெற இருக்கிறார். அவரைத் தொடர்ந்து எஸ்.ஏ.போப்டே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கிறார். அவருக்குப் பிறகு 2021 ஏப்ரலில் நீதிபதி என்.வி. ரமணாவும், 2022 ஆகஸ்டில் நீதிபதி யு.யு. லலித்தும், 2022 நவம்பரில் நீதிபதி டி.ஒய்.சந்திரசூடும், 2024 நவம்பரில் நீதிபதி சஞ்சீவ் கன்னாவும், 2025 ஆண்டு மே மாதத்தில் நீதிபதி பி.ஆர். கவாயும், 2025 நவம்பரில் நீதிபதி சூரியகாந்தும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்பார்கள். பிப்ரவரி 2027-இல் சூர்யகாந்த் ஓய்வு பெறுவார்.


 
 
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ஹரியாணா காங்கிரஸ் தலைவர் விகாஸ் சௌதாரி ஃபரிதாபாத்தில் சுட்டுக் கொலை
அம்பானி வீட்டு காதல் பறவைகளின் புதுக்குடித்தன மாளிகை விலை என்ன தெரியுமா?
பிளஸ் 2 முடித்தவர்களுக்கு இந்திய விமானப் படையில் வேலை
வேலை... வேலை... வேலை... இன்ஜினியர்ஸ் இந்தியா நிறுவனத்தில் வேலை
மும்பை ‘தானே’ குடியிருப்புப் பகுதியில் மக்களுடன் மக்களாக மார்னிங் வாக் வந்த சிறுத்தைப்புலி!