செவ்வாய்க்கிழமை 20 ஆகஸ்ட் 2019

சரியான தலைவரிடம் காங்கிரஸை ஒப்படைத்த பின்பு ராகுல் பதவி விலகலாம்: வீரப்ப மொய்லி

DIN | Published: 08th June 2019 04:12 PM

 

மக்களவைத் தேர்தல் எதிரொலியாக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் அறித்த நிலையில், அவர் விலகக்கூடாது என்று அக்கட்சியின் மூத்த தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி கூறியதாவது:

ஒருவேளை ராகுல் பதவி விலகுவதாக நினைத்தால், அதற்கு இது சரியான நேரமில்லை. அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் விலக வேண்டிய அவசியமும் இல்லை. ஏனென்றால் அவர் தான் காங்கிரஸ் தலைவராக இருக்க தகுதியானவர்.

காங்கிரஸ் கட்சியில் ஆங்காங்கே கட்சி விதிமீறலில் சிலர் ஈடுபடுவதாக தொண்டர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். எனவே ஓய்வு எடுக்க இது நேரமில்லை. காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் தான் தற்போதும் நீடிக்கிறார். எனவே கட்சி ரீதியாக சில கடும் நடவடிக்கைகளை அவர் கட்டாயம் எடுக்க வேண்டும். அதற்கு இதுதான் சரியான தருணம்.

புதுதில்லியில் நடைபெறும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமல்லாமல் மாநில தலைவர்களும் கலந்துகொள்ள வேண்டும். ஒருவேளை காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் விலகுவதாக முடிவு செய்துவிட்டால், காங்கிரஸ் கட்சிக்கு சரியான தலைவரை தேர்வு செய்துவிட்டு, அவரிடம் கட்சியை ஒப்படைத்த பிறகு ராகுல் பதவி விலகலாம் என்று தெரிவித்தார். 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு
பாலாகோட் தாக்குதலுக்கு முன் போருக்கு தயாராக இருந்தது ராணுவம்
இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனநிலையை ஆர்எஸ்எஸ் கைவிட வேண்டும்: எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
சத்தீஸ்கர்: முத்தலாக் கூறி விவாகரத்து செய்தவர் கைது
அயோத்தி வழக்கு: திங்கள்கிழமை விசாரணை திடீர் ஒத்திவைப்பு