இந்தியா

மலைச் சரிவைப் பார்த்திருக்கிறீர்களா? காஷ்மீரில் அருவி போல கொட்டும் மலை!

31st Jul 2019 02:37 PM

ADVERTISEMENT


மலைச் சரிவு காரணமாக ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் இடையேயான சாலைப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

ராம்பன் மாவட்டத்தில் பந்தியால் மற்றும் மோம் பஸ்ஸி இடங்களில் மலைச்சரிவு ஏற்பட்டுள்ளது. கல்லும், மண்ணும் மழைபோலக் கொட்டி வருகிறது. 

 

இதற்கிடையே ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் இடையே 147 மைல்கல் அருகே நேற்று நிகழ்ந்த மலைச் சரிவில் ஒருவர் சிக்கிக் கொண்டிருப்பதைக் கண்ட சிஆர்பிஎஃப் படையைச் சேர்ந்த 72வது பட்டாலியன் வீரர்கள் அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

நேற்று இரவு மலைச் சரிவு ஏற்பட்டபோது, சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த நபர் அதில் சிக்கிக் கொண்டார். இவரை சிஆர்பிஎஃப் படையைச் சேர்ந்த மோப்ப நாய் தான் கண்டுபிடித்து அவரை மீட்க உதவியது.

நிலச்சரிவில் இருந்து மீட்கப்பட்ட நபர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT