இந்தியா

என்ன கூகுள் சிஇஓ பணியிடம் காலியாக இருக்கிறதா? அப்போ சுந்தர் பிச்சை??

30th Jul 2019 03:06 PM

ADVERTISEMENT


கூகுள் சிஇஓ பணியிடம் காலியாக இருப்பதாக லிங்டுஇன் பக்கத்தில் மைக்ரோசாஃப்ட் சார்பில் செய்யப்பட்டிருந்த விளம்பரம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அதோடு மட்டுமல்ல, பலரது கனவு பணியாக இருக்கும் அந்த பதவி காலியானால் சும்மா இருப்பார்களா? பலரும் தங்கள் ரெஸ்யூமேவை அப்பணிக்காக விண்ணப்பித்தும் விட்டனர். ஆனால் அதன்பிறகுதான் அவ்வளவும் பொய் என்று தெரிய வந்தது.

லிங்டுதின் வேலை வாய்ப்புப் பக்கத்தில் யார் வேண்டுமானாலும் பொய்யான தகவல்களை பகிரலாம் என்பதை நிரூபிப்பதற்காக நெதர்லாந்தைச் சேர்ந்த ஒருவர் செய்த போலி விளம்பரம்தான் அது என்பது பிறகுதான் தெரிந்தது.

பணம் செலுத்தி பயன்படுத்தி வரும் இந்த லிங்டுதின் பக்கத்தில் யார் வேண்டுமானாலும் பொய்யான தகவல்களை அளித்து, பயனாளர்களின் முக்கிய விவரங்களை அறிந்து கொள்ள முடியும் என்பதை இந்த விளம்பரம் மூலம் நிரூபித்துள்ளார் மைக்கோல் ரிஜின்டர்.

ADVERTISEMENT

உடனடியாக அந்தப் பதிவை லிங்டுதின் நீக்கிவிட்டுள்ளது. 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT