இந்தியா

மாநிலங்களவை: திவால் சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது

30th Jul 2019 01:16 AM

ADVERTISEMENT


நாடாளுமன்ற மாநிலங்களவையில் திவால் சட்டத் திருத்த மசோதா -2019 திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது.

மாநிலங்களவையில் திவால் சட்டத் திருத்த மசோதாவை நிர்மலா சீதாராமன் திங்கள்கிழமை தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசுகையில், திவால் சட்டத்தை நீர்த்து போகச் செய்யவே இந்தச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்படுவதாக அச்சம் நிலவுகிறது. அதை நீர்த்து போகச் செய்ய மத்திய அரசு அனுமதிக்காது. கடன் பிரச்னைக்கு எளிதில் தீர்வு காண்பதை உறுதி செய்யவே சட்டத் திருத்தம் செய்யப்படுகிறது என்றார்.

அப்போது காங்கிரஸ் எம்.பி. கபில் சிபல் பேசுகையில், தேர்வுக் குழுவுக்கு அனுப்பப்படாமல் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

உருக்கு, மனை வணிகம், ஆட்டோ மொபைல் போன்ற துறைகள் மிகப்பெரும் பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளன. நாட்டின் பொருளாதார நிலை பிரச்னைக்குரிய காலக்கட்டத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது என்றார்.
இதைத் தொடர்ந்து, மாநிலங்களவையில் திவால் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT