இந்தியா

ஜெய்பால் ரெட்டிக்கு மாநிலங்களவையில் அஞ்சலி: கண் கலங்கிய வெங்கய்ய நாயுடு

30th Jul 2019 01:05 AM

ADVERTISEMENT


முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜெய்பால் ரெட்டியின் மறைவுக்கு மாநிலங்களவையில் திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. இரங்கல் செய்தியை வாசித்தபோது, மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கண் கலங்கினார்.
மாநிலங்களவை திங்கள்கிழமை காலை கூடியதும், ஜெய்பால் ரெட்டிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, வெங்கய்ய நாயுடு இரங்கல் செய்தியை வாசித்தார். 
ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவையில் இருவரும் எம்எல்ஏக்களாக இருந்தபோது, தனிப்பட்ட முறையில் ஜெய்பால் ரெட்டியுடன் கொண்டிருந்த நட்பு குறித்து வெங்கய்ய நாயுடு பகிர்ந்து கொண்டார். அப்போது துயரம் தாளாமல் அவரால் தொடர்ந்து பேச இயலவில்லை.
அதைத் தொடர்ந்து, அவை உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் இருக்கையில் இருந்து எழுந்து நின்று சில நிமிடங்கள் ஜெய்பால் ரெட்டிக்கு அஞ்சலி செலுத்தினர். 
பின்னர், உறுப்பினர்கள் இருக்கையில் அமர்ந்த பிறகு, ஜெய்பால் ரெட்டியின் மறைவு உண்மையிலேயே எனக்கு மிகுந்த வேதனையைத் தந்துள்ளது என்று வெங்கய்ய நாயுடு கூறும்போது, அழுகையை அடக்க முயன்றார். 
ஜெய்பால் ரெட்டியுடன் 40 ஆண்டுகள் நட்பு கொண்டிருந்ததால், என்னால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று வெங்கய்ய நாயுடு கூறினார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT