இந்தியா

அதிசயம் ஆனால் உண்மை.. அடிலாபாத் சிறுவர்கள் தொட்டாலே பல்பு ஒளிரும் அதிசயம்! விடியோவைப் பார்க்க!!

29th Jul 2019 03:27 PM

ADVERTISEMENT


மந்திரம் இல்லை, தந்திரம் இல்லை.. தெலங்கானாவில் அடிலாபாத் பகுதியைச் சேர்ந்த சகோதர சகோதரி இருவரும் 'தொட்டால் பூ மலரும்' என்பது போல அவர்கள் தொட்டாலே மின்சார பால்புகள் ஒளிர்கின்றன.

சிர்சனா கிராமத்தைச் சேர்ந்த சமீர் மற்றும் சானியா என்ற சகோதர சகோதரிகள் இருவரும் எல்இடி பல்புகளை தங்கள் உடலில் வைத்ததும் அது ஒளிர்கிறது.

இந்த அதிசயத்தால் கூலித் தொழிலாளியின் பிள்ளைகளான இருவரும் அந்நகரின் கொண்டாடப்படும் பிரமுகர்களாக மாறியுள்ளனர்.

அதுமட்டுமா? ஒரு சில நாட்களில் இவர்களது வீட்டு வாசலில் அக்கம் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஊர் மக்கள், குழந்தைகள் தொட்டு பல்புகளை எரிய வைப்பதைப் பார்க்க வரிசையிலும் காத்துக் கிடக்கிறார்கள்.

ADVERTISEMENT

இந்த அதிசயத் திறன் அவர்களது உடலில் இருக்கிறது என்பது எப்படி தெரிந்தது என்று கேட்டால் அது மிக சுவாரஸ்யமான கதையாக இருக்கிறது.

வீட்டு உபயோகத்துக்காக சமீரின் தந்தை எல்இடி பல்பை எடுத்து வந்த போது, அதனை சமீர் கையில் எழுத்துள்ளான். அப்போது அது ஒளிர்ந்ததால் ஆச்சரியம் அடைந்தார் தந்தை பாஷா. இதுபோல மகளையும் அழைத்து பல்பைத் தொட வைத்த போது அதுவும் ஒளிர்ந்துள்ளது. இதனை பல முறை செய்து பார்த்து, ஏதோ ஒரு அதிசய சக்தி தங்களது பிள்ளைகளிடம் இருப்பதை அறிந்த பாஷா மகிழ்ச்சி அடைந்தார்.

இது பற்றி அறிவியலிலோ, மருத்துவத்திலோ பதில் இல்லை என்றாலும் இதுபோன்ற நிகழ்வுகள் கடந்த காலங்களிலும் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT