இந்தியா

மேகாலய பேரவைத் தலைவர் மறைவு

29th Jul 2019 03:12 AM

ADVERTISEMENT

மேகாலய மாநில சட்டப்பேரவைத் தலைவரான டோன்குபர் ராய், நீண்டநாள் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலமானார். அவருக்கு வயது 64. 
மேகாலயத்தின் முன்னாள் முதல்வரான ராய், உடல்நலக் குறைவு காரணமாக முதலில் ஷில்லாங்கில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் உயர் சிகிச்சைக்காக ஹரியாணா மாநிலம் குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த 18-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். 
கடந்த 10 நாள்களாக அவர் அங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அவரது உடலுறுப்புகள் செயலிழந்ததாகவும், மதியம் 2.40 மணியளவில் அவரது உயிர் பிரிந்ததாகவும் ராயின் குடும்பத்தினர் தெரிவித்தனர். அவரது உடல் திங்கள்கிழமை அதிகாலையில் மேகாலயத்துக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அந்த மாநில சட்டப்பேரவை செயலர் கூறினார். 
பிரதமர் இரங்கல்: மேகாலய பேரவைத் தலைவர் டோன்குபர் ராயின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட இரங்கல் செய்தியில், "மேகாலய முன்னாள் முதல்வரும், பேரவைத் தலைவருமான டோன்குபர் ராயின் மறைவு வருத்தமளிக்கிறது. மேகாலயத்தின் வளர்ச்சிக்காக லட்சியத்துடன் தளராமல் செயல்பட்ட அவர், பலரின் வாழ்க்கை மேம்படக் காரணமாக இருந்தவர்' என்று கூறியுள்ளார். 
மேகாலய ஆளுநர் ததாகதா ராய், முதல்வர் கான்ராட் சங்மா ஆகியோரும் டோன்குபர் ராயின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT