இந்தியா

பாஜக எம்.பி.க்களுக்கு ஆக.3,4 தேதிகளில் பயிற்சி

29th Jul 2019 01:47 AM

ADVERTISEMENT

 

பாஜகவைச் சேர்ந்த அனைத்து எம்.பி.க்களுக்கும் ஆகஸ்ட் மாதம் 3, 4 ஆகிய தேதிகளில் பயிற்சி அளிப்பதற்கு கட்சித் தலைமை முடிவு செய்துள்ளது.

இந்த பயிற்சி முகாமில், பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, பாஜக செயல் தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர். இதுதொடர்பாக, பாஜக அலுவலகத்தில் இருந்து அனைத்து எம்.பி.க்களுக்கும் ஞாயிற்றுக்கிழமை தகவல் அனுப்பப்பட்டது. அதில், பாஜக எம்.பி.க்கள் அனைவரும், வரும் ஆகஸ்ட் 3, 4 ஆகிய தேதிகளில் தலைநகர் தில்லியில் நடைபெறும் பயிற்சி முகாமில் பங்கேற்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பயிற்சி முகாமில், மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், பல்வேறு முக்கிய பிரச்னைகள் குறித்து எம்.பி.க்களிடம் அமித் ஷாவும், மோடியும் எடுத்துரைக்கவுள்ளனர் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT