இந்தியா

ஜார்க்கண்டில் பாஜக கூட்டணி கட்சியுடன் பேச்சுவார்த்தை

29th Jul 2019 03:13 AM

ADVERTISEMENT

 

ஜார்க்கண்டில் நிகழாண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில், அங்கு பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஒரு கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக, ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியின் தலைவரும் பிகார் முன்னாள் முதல்வருமான ஜிதன்ராம் மாஞ்சி தெரிவித்தார்.

பிகாரில் எதிர்க்கட்சிகளின் மகாகூட்டணியில் அவரது கட்சி அங்கம் வகிக்கும் நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் மகாகூட்டணியில் இடம்பெறப் போவதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, பிகார் மாநிலம், கயையில் செய்தியாளர்களிடம் ஜிதன் ராம் மாஞ்சி செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடனான எங்களது கூட்டணி, பிகாருக்கு மட்டுமானதே. ஜார்க்கண்டில் எதிர்க்கட்சிகளின் மகாகூட்டணியில் இடம்பெறப் போவதில்லை.

ADVERTISEMENT

ஜார்க்கண்ட் பேரவைத் தேர்தலுக்காக, அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கம் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இக்கூட்டணியால், இரு கட்சிகளுக்கும் பலன் கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றார் மாஞ்சி.

ஜார்க்கண்டில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கம் கட்சி அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

பாஜகவுடன் பேச்சுவார்த்தை?: ஜார்க்கண்டில் பாஜக தலைவர்களுடனும் மாஞ்சி பேச்சுவார்த்தை நடத்தி நடத்தி வருவதாக, அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்த கருத்து தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளிக்க மறுத்துவிட்ட மாஞ்சி, "அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கம் கட்சியின் தலைவர் சுதேஷ் மஹதோவுடன் எனக்கு தனிப்பட்ட நட்பு உள்ளது. அதன் காரணமாகவே கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறோம்' என்றார்.

அதேசமயம், பிகாரில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மீண்டும் திரும்புவீர்களா என்ற கேள்விக்கு, அதுபோன்ற திட்டம் எதுவும் இல்லை என்று மாஞ்சி பதிலளித்தார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT