இந்தியா

சீக்கியர்களின் புனித நூலை அச்சிட நவீன அச்சகம்

29th Jul 2019 03:12 AM

ADVERTISEMENT

 

சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த் சாகிப்பின் பிரதிகளை அச்சிடுவதற்கு முற்றிலும் கணினிமயமாக்கப்பட்ட, நவீன ஆஃப்செட் அச்சகம் ஏற்படுத்தப்பட்டு இருப்பதாக தில்லி சீக்கிய குருத்வாரா நிர்வாகக் குழு (டிஎஸ்ஜிஎம்சி) தெரிவித்துள்ளது.

இந்த அச்சகம் மணிக்கு 15 ஆயிரம் பக்கங்களை அச்சிடும் கொள்திறனையும் கொண்டது என டிஎஸ்ஜிஎம்சி தலைவர் மன்ஜீந்தர் சிங் சிர்சா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த் சாகிப்பிற்கு உலக அளவில் அதிகரித்து வரும் தேவையை கருத்தில் கொண்டு இதன் பிரதிகளைப் பதிப்பிக்க இந்த நவீன அச்சு இயந்திரம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. உலகில் 50 நாடுகளில் வாழக்கூடிய வெளிநாடு வாழ் இந்திய சீக்கியர்களுக்கு தில்லி சீக்கிய குருத்வாரா நிர்வாக குழுவானது சீக்கிய மத நூல்கள் மற்றும் இலக்கியங்களை வழங்கி வருகிறது. 

அமிர்தசரஸில் உள்ள சிரோமணி குருத்வாரா பிரபந்தக் குழு (எஸ்ஜிபிசி), தில்லியில் உள்ள டிஎஸ்ஜிஎம்சி மட்டுமே உலகளவில் குரு கிரந்த் சாகிப் மற்றும் இதர சீக்கிய சமய இலக்கியங்களை பதிப்பித்து வெளியிடும் பிரத்யேக மற்றும் சட்டபூர்வ உரிமைகளை கொண்டிருக்கின்றன. ரூபாய் 8 கோடியில் இந்த அச்சகம் அமைக்கப்பட்டிருக்கிறது. மணிக்கு 15 ஆயிரம் பக்கங்களை அச்சிடும் கொள்திறனையும் இந்த இயந்திரம் கொண்டிருக்கிறது. அதி நவீன இயந்திரத்தை பயன்படுத்தபடுத்துவதன் மூலம் நேரம் மிச்சமாவதுடன் உற்பத்திக்கான செலவும் குறைகிறது. மேலும், மிகவும் வசதியாகவும் மேம்பட்ட தரத்திலும் அச்சிட முடிகிறது. மேலும், 1,430 பக்கங்கள் கொண்ட குரு கிரந்த் சாகிப் நூலில் சீக்கியர்களின் புனித போதனைகள் அடங்கியுள்ளன. அதில் கபீர், ரவிதாஸ், நம்தேவ் உள்ளிட்ட 30 இதர ஞானிகளின் பாடல்களும் அடங்கி உள்ளன என்றார் அவர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT