இந்தியா

ஆந்திரம், தெலங்கானா அரசுகள் குடும்ப அட்டைகளை ஒருங்கிணைக்கும் திட்டம் ஆக.1-இல் அமல்

29th Jul 2019 01:43 AM

ADVERTISEMENT

 

ஆந்திரம், தெலங்கானாவில் குடும்ப அட்டைகளை ஒருங்கிணைக்க (ரேஷன் போர்ட்டபிலிட்டி) முடிவு செய்துள்ள அந்த மாநில அரசுகள், வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் அதை சோதனை முயற்சியாக அமல்படுத்தத் திட்டமிட்டுள்ளன.

நாடு முழுவதும் குடும்ப அட்டை மூலம் மானிய விலையில் அரிசி, கோதுமை, ராகி, சர்க்கரை, சமையல் எண்ணெய் போன்ற பொருள்களை அரசு விநியோகித்து வருகிறது. ஒரு மாநிலத்தில் வாழும் மக்கள் பிற மாநிலங்களுக்கு வாழ்வாதாரம் தேடி குடியேறும்போது அவர்களது குடும்ப அட்டையை பயன்படுத்த முடிவதில்லை. இது மாவட்டங்களுக்கும் பொருந்தும். 

தொடர்ந்து 3 மாதங்களுக்கு குடும்ப அட்டையை பயன்படுத்தவில்லை என்றால் அது ரத்து செய்யப்படுவதும் வழக்கத்தில் உள்ளது. எனவே, நாடு முழுவதும் ஒரே குடும்ப அட்டையை பயன்படுத்து ரேஷன் கடைகளில் பொருள்களை வாங்கும் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த திட்டமிட்டு அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  

ADVERTISEMENT

இந்நிலையில், ஆந்திர, தெலங்கானா மாநிலங்களில் குடும்ப அட்டைகளை ஒருங்கிணைக்கும் திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்த  முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி,  இதுதொடர்பாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுடன் தொலைபேசியில் உரையாடினார்.  

முதற்கட்டமாக இரண்டு மாநில மக்களும் பயனடையும் வகையில், மாநிலங்களுக்கிடையே  குடும்ப அட்டைகளை ஒருங்கிணைக்க முடிவு செய்தனர். 

இதுகுறித்து, மத்திய அரசிடம் அனுமதி பெறப்பட்டு இதற்கான ஒப்பந்தம் இரு மாநில அரசுகளுக்குமிடையே கையெழுத்தானது. அதற்கான பணிகள் சோதனை முயற்சியாக வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. 

தற்போது ஆந்திரத்தில் வசிக்கும் தெலங்கானாவை சேர்ந்த மக்களின் எண்ணிக்கையை கணக்கிடவும், தெலங்கானாவில் வசிக்கும் ஆந்திர மக்களின் எண்ணிக்கையை கணக்கிடவும் உணவுப்பொருள் வழங்கல் துறைக்கு இருமாநில அரசுகளும் உத்தரவிட்டுள்ளன. 

அதன்படி, ஆந்திர மாநிலத்தில் இந்த கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. எனவே, குடும்ப அட்டையை ரேஷன் போர்ட்டபிலிட்டியில் பதிவு செய்ய விரும்பும் மக்கள் அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம், உணவு பொருள் வழங்கல் (டிஎஸ்ஓ) அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT