மும்பை: மும்பையில் கடும் வெள்ளத்தில், தண்டவாளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கும் மகாலஷ்மி விரைவு ரயிலில் இருந்து 700 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இரவு முழுவதும் பெய்த கன மழை காரணமாக தண்டவாளங்களை வெள்ளம் சூழ்ந்ததால், வாங்கனி அருகே மகாலஷ்மி விரைவு ரயில் நள்ளிரவு 3 மணியளவில் நடு வழியில் நிறுத்தப்பட்டது.
ரயிலில் 700 பயணிகள் வரை இருந்ததால், அதில் இருந்த பயணிகளை மீட்கும் முயற்சியில் தேசிய பேரிடர் மேலாண்மை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
படகுகளை ரயில்களுக்கு அருகே கொண்டு சென்று, ஒவ்வொரு பயணிகளாக படகில் ஏற்றி பத்திரமாக வெளியே கொண்டு வந்து, பேருந்து மற்றும் சிறிய டெம்போக்களில் அவர்களை ஏற்றி அனுப்பி வருகிறார்கள்.
ரயிலில் இருக்கும் பயணிகள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும், பாதுகாப்பாக மீட்கும் பணிகள் நடந்து வருவதாகவும் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்தரி ஃபட்னவிஸ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.