இந்தியா

கொல்லூரு மூகாம்பிகை கோயிலில் வழிபட்ட இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க

27th Jul 2019 01:33 AM

ADVERTISEMENT


கர்நாடக மாநிலம் கொல்லூரு மூகாம்பிகை கோயிலில் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெள்ளிக்கிழமை வழிபட்டார்.
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அவரது மனைவி மைத்ரீபாலா விக்ரமசிங்க ஆகியோர் இரண்டு நாள் ஆன்மிகப் பயணமாக இந்தியா வந்தனர். வெள்ளிக்கிழமை அவர்கள் கர்நாடக மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கொல்லூரு மூகாம்பிகை அம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
இதனையொட்டி,  பக்தர்களுக்கு கோயிலுக்குள் செல்ல காலை முதல் பிற்பகல் வரை தடை விதிக்கப்பட்டிருந்தது.  உடுப்பி மாவட்ட ஆட்சியர் ஹெப்சிபாராணி கொரல்பட்டி மற்றும் உடுப்பி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் நிஷா ஜேம்ஸ் மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பூரணகும்ப மரியாதை வழங்கப்பட்டது.   கோயிலில் வழிபட்ட பின்னர் தனி ஹெலிகாப்டர் மூலம் மங்களூருக்கு சென்றார்.  
சனிக்கிழமை காலை கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டத்திலுள்ள கோயிலில் தரிசனம் முடித்துக் கொண்டு, மாலை இலங்கைக்கு திரும்ப உள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT