ஸ்லிமா நஸ்ரீன் இந்தியாவில் மேலும் ஓராண்டு தங்க அனுமதி

சர்ச்சைக்குரிய வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீனுக்கு இந்தியாவில் மேலும் ஓராண்டு தங்குவதற்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
ஸ்லிமா நஸ்ரீன் இந்தியாவில் மேலும் ஓராண்டு தங்க அனுமதி

சர்ச்சைக்குரிய வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீனுக்கு இந்தியாவில் மேலும் ஓராண்டு தங்குவதற்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

இதுகுறித்து தில்லியில் மத்திய அரசு அதிகாரிகள் வட்டாரங்கள் கூறியதாவது: ஸ்வீடன் பிரஜையான நஸ்ரீன், இந்தியாவில் தங்கியிருப்பதற்கு கடந்த 2004ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து அனுமதியளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவருக்கு வரும் 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரையில் மேலும் ஓராண்டு இந்தியாவில் தங்கியிருப்பதற்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது என்றார் அவர்.

முன்னதாக, தஸ்லிமா நஸ்ரீனுக்கு இந்தியாவில் தங்கியிருப்பதற்கு மத்திய அரசு 3 மாதங்கள் அனுமதியளித்தது. இதையடுத்து அந்த அனுமதியை ஓராண்டுக்கு நீட்டிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு சுட்டுரை வாயிலாக தஸ்லிமா நஸ்ரீன் கோரிக்கை விடுத்தார். 

இந்நிலையில், தஸ்லிமா நஸ்ரீனின் கோரிக்கையை ஏற்று, அவருக்கு இந்தியாவில் மேலும் ஓராண்டு தங்கியிருப்பதற்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

மத்திய அரசுக்கு தஸ்லிமா நஸ்ரீன் நன்றி: இந்தியாவில் தங்கியிருப்பதற்கு மேலும் ஓராண்டு அனுமதியளிக்கப்பட்டிப்பதைத் தொடர்ந்து, மத்திய அரசுக்கு தஸ்லிமா நஸ்ரீன் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சுட்டுரையில் அவர் வெளியிட்டுள்ள பதிவுகளில், "சுட்டுரை பதிவுகள் மிகவும் சக்திவாய்ந்தவை. ஜூலை 16ஆம் தேதி எனக்கான அனுமதி நீட்டிக்கப்படாதது குறித்து சுட்டுரையில் பதிவிட்டிருந்தேன். இதையடுத்து 17ஆம் தேதி எனக்கு 3 மாதங்கள் அனுமதியளிக்கப்பட்டது. 

இதையடுத்து எனக்கு இந்தியாவில் நீண்ட காலம் தங்கியிருக்க அனுமதியளிக்க வேண்டும் என்று அரசுக்கு ஏராளமான நண்பர்கள் கோரிக்கை விடுத்தனர். தற்போது எனக்கு இந்தியாவில் தங்கியிருக்க மேலும் ஓராண்டு அனுமதி தரப்பட்டுள்ளது. தனது முடிவை மாற்றிக் கொண்டதற்கு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு நன்றி. எனது சுட்டுரை நண்பர்களுக்கும் நன்றி' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாமிய மதத்துக்கு எதிராக தெரிவித்த கருத்துகளுக்காக தஸ்லிமா நஸ்ரீனுக்கு வங்கதேச அடிப்படைவாதிகளிடம் இருந்து கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. இதனால் வங்கதேசத்தில் இருந்து கடந்த 1994ஆம் ஆண்டு தஸ்லிமா நஸ்ரீன் வெளியேறினார். அன்று முதல் வங்கதேசத்துக்கு செல்லாமல் வெளிநாடுகளில் அவர் வசித்து வருகிறார்.

இந்தியாவில் நிரந்தர குடியுரிமை கேட்டும் தஸ்லிமா நஸ்ரீன் விண்ணப்பித்துள்ளார். ஆனால் அதன்மீது இதுவரை மத்திய அரசு முடிவெடுக்கவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com