சோன்பத்ராவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் ஆறுதல்

உத்தரப் பிரதேச மாநிலம், சோன்பத்ராவில் நிலத்தகராறில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த முதல்வர் யோகி ஆதித்யநாத்,  அவர்களுக்கு இழப்பீட்டுத்தொகை வழங்கவும், நீதி விசாரணை நடத்தவும்
சோன்பத்ரா துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து சிகிச்சைப்பெற்று வருவோரை  ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறும் முதல்வர் யோகி ஆதித்யநாத்.
சோன்பத்ரா துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து சிகிச்சைப்பெற்று வருவோரை  ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறும் முதல்வர் யோகி ஆதித்யநாத்.

உத்தரப் பிரதேச மாநிலம், சோன்பத்ராவில் நிலத்தகராறில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த முதல்வர் யோகி ஆதித்யநாத்,  அவர்களுக்கு இழப்பீட்டுத்தொகை வழங்கவும், நீதி விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார். 

சோன்பத்ராவில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற மோதலில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ .18.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ .2.5 லட்சமும் இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க உத்தரவிட்ட முதல்வர், வழக்கு விசாரணையை 10 நாள்களுக்குள் முடிக்க உத்தரவிட்டார்.

செய்தியாளர்களிடம் முதல்வர் யோகி ஆதித்யநாத் மேலும் கூறியதாவது: காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் செய்த பாவம் இது. இதற்கான விலையை காங்கிரஸ் அளிக்க வேண்டியிருக்கும். 

பழங்குடியினருக்கு அளிக்கப்பட்ட நிலத்தை 1955 ஆம் ஆண்டில் அப்போதைய காங்கிரஸ் எம்எல்சி மூலம் அபகரிக்கப்பட்டது. விசாரணைக்குழு இதை விசாரிக்கும்.  இந்த சம்பவம் குறித்து கூடுதல் தலைமைச் செயலரின் கீழ் மூன்று பேர் கொண்ட குழு விசாரிக்கும். 

காங்கிரஸ் கட்சியும் அதன் கொள்கைகளும் எப்போதுமே பழங்குடியினருக்கு எதிரானவை. சோன்பத்ராவின் பிற வழக்குகளும் விசாரிக்கப்படும். 1952ஆம் ஆண்டு முதல் இந்த வழக்கின் முழு விவரங்களும் ஆராயப்பட்டு 10 நாள்களில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். 

குற்றம்சாட்டப்பட்ட நபர் சமாஜவாதி கட்சியை சேர்ந்தவர். இதுதவிர, அவரது சகோதரர் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர். அவர்கள் அனைவரும் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர். இதன்மூலம் ஏழைகள் மீது வழக்கு பதிவு செய்து, அப்போதைய ஆளுங்கட்சிக்கு ஆதரவாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 

சோன்பத்ரா மாவட்டத்திற்காக ஒரு தனி குழு அமைக்கப்படுகிறது, இது மாவட்டத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் கவனம் செலுத்தும். 

ஒரு ஆண்டுக்குள் பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் முசாஹர் இனத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு வீடுகள் கட்டித்தரப்படும். 

தகுதியுள்ளவர்களுக்கு கழிப்பறைகள், மின்சார இணைப்பு, எரிவாயு இணைப்பு, விதவை ஓய்வூதியம் ஆகியவை வழங்கப்படும். அனைவருக்கும் ரேஷன் கார்டு வழங்கப்படும். மேலும் புறக்காவல் நிலையமும், கோரவால் பகுதியில் ஒரு தீயணைப்பு நிலையம் மற்றும் அங்கன்வாடி மையமும் நிறுவப்படும். இந்த வழக்கை வெளிப்படைத்தன்மையுடன் விசாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com