இந்தியா

விண்ணில் பாய்ந்தது சந்திரயான்-2: இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

22nd Jul 2019 04:22 PM

ADVERTISEMENT


புது தில்லி: சந்திரயான்-2 விண்கலத்தை வெற்றிரமாக விண்ணில் செலுத்திய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் வெற்றிரமாக விண்ணில் ஏவப்பட்டது ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், நிலவின் தென்துருவத்தில் ஆய்வு நடத்துவது தனித்துவம் பெற்றது. இந்த ஆராய்ச்சியின் மூலம் நிலவு பற்றிய புதிய தகவல்களை நாம் அறிந்து கொள்ள முடியும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT