இந்தியா

ரூ.5,851 கோடிக்கு தேர்தல் நிதிப் பத்திரங்கள் விற்பனை: ஆர்டிஐ தகவல்

22nd Jul 2019 02:11 AM

ADVERTISEMENT

 

அரசியல் கட்சிகளுக்கு நிதியளிப்பதற்காக கடந்த ஆண்டு மார்ச் முதல் நடப்பாண்டு மே மாதம் வரையில் மொத்தம் ரூ.5,851 கோடிக்கு தேர்தல் நிதிப் பத்திரங்கள் வாங்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. 

மத்தியப் பிரதேச மாநிலம், நிமுச்சைச் சேர்ந்த சந்திரசேகர் கெளட் என்பவர் ஆர்டிஐ (தகவல் அறியும் உரிமைச் சட்டம்) மூலம் பெற்ற தகவலின்படி, 2018 மார்ச் முதல் 2019 மே மாதம் வரையில் சுமார் ரூ.5,851 கோடிக்கு தேர்தல் நிதிப் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 

அதில், சுமார் ரூ.5,831 கோடி மதிப்பிலான நிதிப் பத்திரங்கள் மட்டும் பணமாக மாற்றப்பட்டுள்ளன. எஞ்சிய சுமார் ரூ.20.25 கோடி மதிப்பிலான நிதிப் பத்திரங்கள் குறிப்பிட்ட காலத்துக்குள்ளாக பணமாக மாற்றப்படாததால் அவை காலாவதியாகிவிட்டன. 

ADVERTISEMENT

இதில் குறிப்பிடத்தக்க வகையில், பல்வேறு கட்சிகளின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள தில்லியில் ரூ.4,715 கோடி மதிப்பிலான நிதிப் பத்திரங்கள் பணமாக மாற்றப்பட்டுள்ளன. அங்கு விற்பனை செய்யப்பட்ட நிதிப் பத்திரங்களின் மதிப்போடு (ரூ.874 கோடி) ஒப்பிடுகையில் இது 5 மடங்கு அதிகமாகும். 

மும்பையில் ரூ.1,782 கோடி மதிப்பிலான நிதிப் பத்திரங்கள் விற்பனையான நிலையில், அதில் ரூ.121 கோடி மதிப்பிலான பத்திரங்களே பணமாக மாற்றப்பட்டுள்ளன. இதேபோல், கொல்கத்தாவில் ரூ.1,389 கோடி, பெங்களூரில் ரூ.195 கோடி, ஹைதராபாதில் ரூ.806 கோடி, புவனேசுவரத்தில் ரூ.315 கோடி, சென்னையில் ரூ.184 கோடி மதிப்பிலான தேர்தல் நிதிப் பத்திரங்கள் விற்பனையாகின. 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT