இந்தியா

மும்பை கட்டடத்தில் தீ விபத்து: ஒருவர் பலி

22nd Jul 2019 01:49 AM

ADVERTISEMENT


மும்பையில் நான்கு மாடி கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை திடீர்  தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஒருவர் பலியானார்.
இதுகுறித்து தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
பிரபல தாஜ் மஹால் பேலஸ் ஹோட்டலுக்கு பின்புறம் அமைந்துள்ள சர்ச்சில் சேம்பர் என்ற  நான்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை  நண்பகலுக்கு பிறகு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 
மெரி வெதர் சாலையில் அமைந்துள்ள அக்கட்டடத்தின் தரைத்தளத்தில் மதியம் 12.17 மணியளவில் பற்றிய தீ மளமளவென கட்டடம் முழுவதும் பரவியது. இதில், ஒருவர் உயிரிழந்தார்; மற்றொருவர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
மேலும் அந்த கட்டடத்தில் சிக்கியிருந்த மூத்தகுடிமக்கள் உள்ளிட்ட 14 பேரை தீயணைப்பு படையினர் ஏணியின் உதவியுடன் மீட்டனர். 
அவர்களில் சிலருக்கு கரும்புகையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தீப்பிடித்த கட்டடத்தில் வேறு எவரேனும் சிக்கியுள்ளனரா என்பது குறித்த தேடுதல் வேட்டையில் தீயணைப்பு படையினர்  ஈடுபட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT