இந்தியா

குமாரசாமி ராஜிநாமா கடிதம் போலியானது: கர்நாடக முதல்வர் அலுவலகம்

22nd Jul 2019 10:47 PM

ADVERTISEMENT


கர்நாடக முதல்வர் ராஜிநாமா செய்ததாக வெளியான கடிதம் போலியானது என்று கர்நாடக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

கர்நாடக சட்டப்பேரைவியில் மூன்றாவது நாளாக நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே நடத்த வேண்டும் என்று சபாநாயகர் மற்றும் பாஜக கூறி வருகின்றனர். அதேசமயம், நம்பிக்கை வாக்கெடுப்பை இன்று நடத்தக்கூடாது என்று காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) கூறிவருகிறது. இதனால், சட்டப்பேரவையில் அமளி உருவானது.

இதனிடையே, கர்நாடக முதல்வர் குமாரசாமி ராஜிநாமா செய்தததாக அவர் கையொப்பம் இட்ட கடிதம் ஒன்று சட்டப்பேரவையில் அவரது மேசையில் இருந்தது. ஆனால், அந்த கடிதம் போலியானது என்று கர்நாடக முதல்வர் அலுவலகம் உறுதி செய்தது.

இதுகுறித்து, முதல்வர் குமாரசாமி பேசுகையில், 

ADVERTISEMENT

"எனது ராஜிநாமாவை ஆளுநரிடம் சமர்ப்பித்ததாக எனக்கு தகவல் கிடைத்தது. முதல்வராக யார் வரவிருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. யாரோ என்னுடைய கையொப்பத்தை போலியாக இட்டு அதை சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர்" என்றார்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT