இந்தியா

ஒடிஸா: பத்குரா பேரவை தேர்தலில் 72% வாக்குப்பதிவு

22nd Jul 2019 02:27 AM

ADVERTISEMENT

 

ஒடிஸாவின் பத்குரா சட்டப் பேரவைத் தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில் 72.75 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஒடிஸாவில் கடந்த ஏப்ரல் மாதம் சட்டப் பேரவை பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் கேந்திரபாரா மாவட்டம் பாட்குரா தொகுதி பிஜு ஜனதா தளம் வேட்பாளர் பிரகாஷ் அகர்வால் இறந்ததால் அத்தொகுதி தேர்தல் நடைபெறவில்லை. சட்டப் பேரவைத் தேர்தலில் முதல்வர் பிஜு பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.

இந்நிலையில், பத்குரா சட்டப் பேரவைத் தொகுதியில் சனிக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இதில், பதிவான வாக்குகள் குறித்து தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதில் 72.75 சதவீத வாக்குகள் பதிவாயின. மொத்தம் 2.44 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாக்களித்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த தேர்தலில் பிஜு ஜனதா தளம் சார்பில் பிரகாஷ் அகர்வாலின் மனைவி சாவித்ரி அகர்வால் போட்டியிட்டார். முக்கிய எதிர்க்கட்சியான பாஜக சார்பில் விஜய் மொஹாபாத்ரா களமிறங்கினார். காங்கிரஸ் சார்பில் ஜெயந்தா குமார் நிறுத்தப்பட்டார். தேர்தல் முடிவு வரும் 24-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT