இந்தியா

அஸ்ஸாம், பிகாரில் நீடிக்கும் பெருவெள்ளம்: பலி 166 ஆனது

22nd Jul 2019 02:26 AM

ADVERTISEMENT

 

அஸ்ஸாம், பிகார் மாநிலங்களில் கனமழை காரணமாக பெருவெள்ளம் நீடிக்கும் நிலையில், இரு மாநிலங்களிலுமாக பலியானோரின் எண்ணிக்கை 166-ஆக ஞாயிற்றுக்கிழமை அதிகரித்தது. மேலும், சுமார் 1.11 கோடி மக்கள் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் தத்தளித்து வருகின்றனர். 

மழை தொடர்பான பாதிப்புகளால் அஸ்ஸாமில் 64 பேரும், பிகாரிஸ் 102 பேரும் உயிரிழந்துள்ளனர். பிகாரில் 12 மாவட்டங்களைச் சேர்ந்த 72.78 லட்சம் பேரும், அஸ்ஸாமில் 18 மாவட்டங்களைச் சேர்ந்த 38.37 லட்சம் பேரும் மழை வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

பிகார் மாநிலத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சீதாமரி மற்றும் தர்பங்கா மாவட்டங்களில் நிவாரண முகாம்களையும், மீட்புப் பணிகளையும் மாநில முதல்வர் நிதீஷ் குமார் நேரில் சென்று பார்வையிட்டார். அஸ்ஸாம் மாநிலத்தின் காஸிரங்கா தேசிய உயிரியல் பூங்காவில் உயிரிழந்த விலங்குகளின் எண்ணிக்கை 141-ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT