புதன்கிழமை 21 ஆகஸ்ட் 2019

நாளைதான் கடைசிநாள்: குமாரசாமி அரசுக்கு எடியூரப்பா செக்! 

DIN | Published: 21st July 2019 07:11 PM

 

பெங்களூரு: நாளைதான் குமாரசாமி அரசுக்கு கடைசிநாள் என்று கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் ஞாயிறன்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா, சபாநாயகர், குமாரசாமி ஆகியோர் திங்கள்கிழமை(நாளை) பெரும்பான்மையை அவையில் நிருபிப்போம் எனத் தெரிவித்துள்ளார்கள். ஆனால் நான் 100 சதவீதம் நம்பிக்கையுடன் சொல்கிறேன், நாளை குமாரசாமி அரசு முடிவுக்கு வந்துவிடும். நாளைதான் குமாரசாமி அரசுக்கு கடைசிநாள்.

காங்கிரஸ், ஜேடிஎஸ் கூட்டணி அமைத்த நாளில் இருந்தே தொடர்ந்து சிக்கல் கட்சிக்குள் இருந்து வருகிறது. எப்படியும் ஆட்சி  கவிழ்ந்து விடும் என்ற நிலையில் தேவையில்லாமல் அவகாசத்தைப் பெற்றுக்கொண்டு காலம் தாழ்த்தி வருகிறார்கள்.

மும்பையில் தங்கி இருக்கும் 15 எம்எல்ஏக்களை வாக்களிக்கக் கூறி கட்டாயப்படுத்தக் கூடாது உச்ச நீதிமன்றம் தெளிவாகக் கூறிவிட்டது. அது அவர்களுடைய விருப்பம் எனக் கூறி இருக்கிறது.

மேலும், அரசுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் எந்தவிதமான கொள்கை முடிவுகளும், பெரிய முடிவுகளும் எடுக்கக் கூடாது என்று முதல்வருக்கு ஆளுநர் கடிதம் எழுதியுள்ளார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : karnataka JD(S) congress BJP kumarasamy yediyurappa flloor test

More from the section

பேராசியர் பணி வேண்டுமா? அழைக்கிறது புதுச்சேரி ஜிப்மர்
பேராசிரியர் பணி வேண்டுமா..? உடனே விண்ணப்பிக்கவும்
கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள அமிதாப் பச்சன்: காரணத்தை விளக்கும் மருத்துவர்!
ப. சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனுவை உடனடியாக விசாரிக்க தலைமை நீதிபதி அமர்வும் மறுப்பு
சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் கிடைப்பதில் நீடிக்கும் சிக்கல்: உத்தரவு பிறப்பிக்க நீதிபதி ரமணா மறுப்பு