வியாழக்கிழமை 22 ஆகஸ்ட் 2019

கர்நாடகாவில் இன்று இரவு பாஜக எம்எல்ஏ-க்கள் கூட்டம்

DIN | Published: 21st July 2019 06:23 PM


கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில் பெங்களூவில் உள்ள ரமதா ஹோட்டலில் இன்று இரவு பாஜகவின் எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடைபெறுகிறது.  

கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) எம்எல்ஏ-க்கள் 15 பேர் ராஜிநாமா செய்ததையடுத்து, குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு சிக்கல் உருவானது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, பல்வேறு அரசியல் குழப்பங்கள் ஏற்பட்ட நிலையில், சட்டப்பேரவையில் 18-ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்வதாக குமாரசாமி தெரிவித்தார். 

ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் நடைபெற்றது. இதன்பிறகு, நம்பிக்கை வாக்கெடுப்பு வெள்ளிக்கிழமை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலாவும் வெள்ளிக்கிழமை மதியம் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துமாறு கெடு விதித்தார். ஆளுநர் கெடு விதித்த 1.30 மணியைக் கடந்தும் நம்பிக்கை தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. 

இதன்பிறகு, வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துமாறு ஆளுநர் இரண்டாவது கெடு விதித்தார்.

 இதனிடையே, அவையை திங்கள்கிழமை வரை ஒத்திவைக்குமாறு காங்கிரஸ் மற்றும் மஜத வலியுறுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக உறுப்பினர்கள், வெள்ளிக்கிழமையே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால், இரண்டு தரப்புக்கும் இடையிலான வாக்குவாதம் நீடித்து அமளியே தொடர்ந்தது.

இதன் காரணமாக, சட்டப்பேரவையை வரும் 22-ஆம் தேதிக்கு (நாளை) ஒத்திவைத்து பேரைவத் தலைவர் ரமேஷ்குமார் உத்தரவிட்டார். இதனால், நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில், பெங்களூருவில் உள்ள ரமதா ஹோட்டலில் இன்று இரவு பாஜக எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, திங்கள்கிழமையே குமாரசாமி அரசின் கடைசி தினம் என்று எடியூரப்பா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

காஷ்மீரில் பெரும்பாலான இடங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு 
சந்திரயான்- 2: நிலவின் புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு; ப. சிதம்பரத்தை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி
ஆறு விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு எரிபொருள் வழங்குதல் நிறுத்தம்: ஏன் தெரியுமா? 
ஆதாரங்கள் அடிப்படையில் விசாரணை நடக்கவில்லை; வேறு எதற்காகவோ நடக்கிறது: அபிஷேக் சிங்வி வாதம்