உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சமாஜவாதி முன்னாள் எம்.பி. ஆதீக் அகமதுக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை சோதனை நடத்தினர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொழிலதிபர் மோஹித் ஜெய்ஸ்வால் என்பவரை கடத்திச் சென்று தாக்கியது தொடர்பாக எழுந்த புகார் அடிப்படையில், சமாஜவாதி கட்சியின் முன்னாள் எம்.பி. ஆதீக் அகமதுக்கு எதிராக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து சிபிஐ வழக்கு பதிவு செய்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.