வாடகைத் தாய் முறையை ஒழுங்குபடுத்தும் மசோதா அறிமுகம்

வாடகைத் தாய் முறையை ஒழுங்குபடுத்தும் மசோதா மக்களவையில் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. வாடகைத் தாய் முறையை வர்த்தக ரீதியில் பயன்படுத்துவதற்கு இந்த மசோதா தடை விதிக்கிறது.


வாடகைத் தாய் முறையை ஒழுங்குபடுத்தும் மசோதா மக்களவையில் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. வாடகைத் தாய் முறையை வர்த்தக ரீதியில் பயன்படுத்துவதற்கு இந்த மசோதா தடை விதிக்கிறது.
குழந்தை இல்லாத தம்பதிகள் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் முறை நடைமுறையில் உள்ளது. ஆனால், தற்போது வாடகைத் தாய் முறை வர்த்தக ரீதியாக பயன்படுத்தப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, உலக நாடுகளில் உள்ள தம்பதிகளுக்கு வாடகைத் தாய் மூலம் குழந்தைப் பெற்றுத் தரும் வர்த்தக மையமாக இந்தியா விளங்கி வருவது தெரிய வந்தது. 
வாடகைத் தாய் முறையை ஒழுங்குப்படுத்துவதற்கு முறையான சட்டங்கள் இல்லாததால், சில மருத்துவமனைகள் இந்த நடைமுறையை தவறாக பயன்படுத்துவதாக அந்த ஆய்வில் கூறப்பட்டது.
இதைத் தடுக்கும் வகையில் வாடகைத் தாய் (ஒழுங்குமுறை) மசோதா, 2019' மக்களவையில் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது:
சட்டப்படி திருமணமாகி குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் நிறைவடைந்த இந்திய தம்பதிகள், வாடகைத் தாய் மூலம் குழந்தைகளை பெறலாம். குழந்தைப் பெற்றுத் தரும் வாடகைத் தாய், அந்த தம்பதிகளின் உறவினராக இருக்க வேண்டும். ஒரு பெண், ஒரே ஒரு முறை மட்டுமே வாடகைத் தாயாக இருக்க வேண்டும். அவ்வாறு வாடகைத் தாயாக இருக்கும் பெண், திருமணமானவராக இருக்க வேண்டும். அவருக்கு ஏற்கெனவே குழந்தை இருக்க வேண்டும். அவர் 25-35 வயதுடையவராக இருக்க வேண்டும்.
இந்த முறையை ஒழுங்குபடுத்துவதற்கு மத்திய மற்றும் மாநில அளவில் வாடகைத் தாய் வாரியம் அமைக்கப்படும். வாடகைத் தாய் மூலம் பெறப்பட்ட குழந்தைகளை, தம்பதிகள் எக்காரணத்தை கொண்டும் கைவிட்டுவிடக் கூடாது என்று அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com