பாகிஸ்தான்: ஹபீஸ் சயீதுக்கு  இடைக்கால ஜாமீன்

மும்பை தாக்குதல் சம்பவத்தின் முக்கிய குற்றவாளியும், ஜமாத்- உத்-தாவா (ஜேயூடி) பயங்கரவாத அமைப்பின் தலைவருமான  ஹபீஸ் சயீது மற்றும்
பாகிஸ்தான்: ஹபீஸ் சயீதுக்கு  இடைக்கால ஜாமீன்


மும்பை தாக்குதல் சம்பவத்தின் முக்கிய குற்றவாளியும், ஜமாத்- உத்-தாவா (ஜேயூடி) பயங்கரவாத அமைப்பின் தலைவருமான  ஹபீஸ் சயீது மற்றும் அவரது உதவியாளர்கள் 3 பேருக்கு, பாகிஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. 
தடை செய்யப்பட்ட ஜேயூடி அமைப்புக்கு சொந்தமான கல்லூரி, சட்ட விரோதமாக நிலத்தை கையகப்படுத்தியது தொடர்பான வழக்கில் அவர்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிடப்பட்டது. 
பாகிஸ்தானில் ஜேயூடி அமைப்புக்கு தொடர்புடையவர்களால் 300க்கும் மேற்பட்ட கல்லூரிகள், பள்ளிகள், மருத்துவமனைகள், பதிப்பகம் மற்றும் ஆம்புலன்ஸ் சேவை நடத்தப்பட்டு வந்தது. இதில் பல கல்வி நிறுவனங்கள் சட்ட விரோதமாக நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது. 
இந்நிலையில், மார்ச் மாதத்தில், பஞ்சாப் காவல்துறையினர் 160 கல்லூரிகள், 32 பள்ளிகள், இரண்டு கல்லூரிகள், நான்கு மருத்துவமனைகள், 178 ஆம்புலன்ஸ்கள் மற்றும் ஜேயூடியுடன் தொடர்புடைய 153 மருந்தகங்கள் மற்றும் ஃபலா-இ-இன்சானியத் அறக்கட்டளை ஆகியவற்றை பாகிஸ்தான் அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. தெற்கு சிந்து மாகாணத்தில், ஜேயூடி மற்றும் எஃப்ஐஎஃப் நடத்தி வந்த 56 கல்வி நிறுவனங்களும் அதிகாரிகளால் கையகப்படுத்தப்பட்டன.
இந்த வழக்கு லாகூரில் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் (ஏடிசி) நடைபெற்று வந்தது. சயீது மற்றும் அவரது உதவியாளர்களான ஹபீஸ் மசூத், அமீர் ஹம்சா மற்றும் மாலிக் ஜாஃபர் ஆகியோருக்கு ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கியும், தலா ரூ .50,000 வீதம் செலுத்தக்கோரி ஜாமீன் வழங்கப்பட்டதாக அந்நாட்டின் டான்' நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
விசாரணையின்போது, சயீதின் வழக்குரைஞர் கூறுகையில், ஜேயூடி எந்தவொரு நிலத்தையும், சட்ட விரோதமாக பயன்படுத்தவில்லை என்பதால் ஜாமீன் மனுவை ஏற்கும்படி நீதிமன்றத்தை வலியுறுத்தினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com